இதுவரை உலகளவில் கிட்டத்தட்ட 300 இறப்புகளுடன் தொடர்புடைய தரமற்ற அசுத்தமான இருமல் சிரப்கள் பற்றிய உலக சுகாதார அமைப்பின் ஆய்வு, இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளிலிருந்து தயார் செய்யப்படும் 20 நச்சு கலந்த மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதிலளித்த உலக சுகாதார அமைப்பின் (WHO) செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர், இந்த 20 தயாரிப்புகளும் இரு நாடுகளிலும் "15 வெவ்வேறு உற்பத்தியாளர்களால்" தயாரிக்கப்பட்டதாகவும், அனைத்து மருந்துகளும் சிரப்கள் - இருமல் மருந்து, பாராசிட்டமால் அல்லது வைட்டமின்கள் என்றும் கூறினார்.
இவற்றில் முன்னர் அடையாளம் காணப்பட்ட 15 தரமற்ற அசுத்தமான சிரப்கள் அடங்கும். அவற்றில் 7 இந்தியாவில் ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் (4), நொய்டாவைச் சேர்ந்த மரியன் பயோடெக் (2) மற்றும் பஞ்சாப்பை தளமாகக் கொண்ட க்யூ.பி பார்மசெம் (1) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது. மீதமுள்ளவை இந்தோனேசியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள 15 மருந்துகளில் 'மருத்துவ தயாரிப்பு எச்சரிக்கைகளை' அனுப்பியுள்ளது. அங்கு கடந்த ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிரப்களை உட்கொண்ட குறைந்தது 88 குழந்தைகள் இறந்தனர். இதே போல் மைக்ரோனேசியா மற்றும் மார்ஷல் தீவுகளிலும் இறப்புகள் பதிவாகியுள்ளது. தற்போது இது இந்தோனேசியாவில் ஒரு எச்சரிக்கையை எழுப்பியுள்ளது. அங்கு உள்நாட்டில் விற்கப்படும் சிரப்களை உட்கொண்ட 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இறந்துள்ளனர்.
இந்த ஜூன் மாத தொடக்கத்தில், லைபீரியாவில் விற்கப்படும் பாராசிட்டமால் சிரப்பில் டைதிலீன் கிளைகோல் அல்லது எத்திலீன் கிளைகோல் கலந்திருப்பதைக் கண்டறிந்த நைஜீரிய மருந்துக் கட்டுப்பாட்டாளர் மருந்தை பயன்படுத்துவதில் இருந்து எச்சரிக்கை விடுத்தார். இந்த சிரப்பை மும்பையை சேர்ந்த நிறுவனம் தயாரித்தது.
பல நாடுகளில் "சாத்தியமான அசுத்தமான சிரப்கள்" பற்றிய ஊடக அறிக்கையை உலக சுகாதார அமைப்பு அறிந்திருப்பதாக லிண்ட்மியர் கூறினார். ஆனால் அதன் மருத்துவ தயாரிப்பு எச்சரிக்கைகளின் பட்டியல் "விரிவாக்கப்படவில்லை". மேலும் தகவல்களைப் பெறும்போது இது மாறலாம்," என்றும் அவர் கூறினார்.
அதிகமான மக்கள் தரமற்ற மருந்தை உட்கொள்வதை உறுதிசெய்ய மருத்துவ தயாரிப்பு எச்சரிக்கைகள் எழுப்பப்படுகின்றன மற்றும் பொருட்கள் விநியோகச் சங்கிலியிலிருந்து அகற்றப்படுகின்றன. ஒரு தயாரிப்பு மாசுபட்டுள்ளது என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் இருக்கும்போது மட்டுமே உலக சுகாதார அமைப்பு (WHO) இதுபோன்ற எச்சரிக்கைகளை எழுப்புகிறது என்று லிண்ட்மேயர் கூறினார்.
நிகழ்வுகள் இணைக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த லிண்ட்மேயர்,“பாதிக்கப்பட்ட நாடுகளுடனான எங்கள் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்றுவரை எங்களால் இணைப்பை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்திய சிரப்கள் மற்ற நாடுகளால் தடையிட்டப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, ஏற்றுமதிக்கான அனைத்து இருமல் சிரப்புகளும் அனுப்பப்படுவதற்கு முன்பு சோதனை செய்யப்படுவதற்கான வழிமுறையை மத்திய அரசு அமைத்துள்ளது.
மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், நாட்டின் நான்கு மத்திய மருந்துப் பரிசோதனைக் கூடங்கள், இரண்டு பிராந்திய சோதனைக் கூடங்கள் அல்லது NABL-ன் அங்கீகாரம் பெற்ற மாநில சோதனைக் கூடங்கள் ஆகியவற்றில் இருந்து 'பகுப்பாய்வுச் சான்றிதழைப்' பெறும் இருமல் சிரப்கள் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியது.
கடந்த ஆண்டு அக்டோபரில் மைடன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த அசுத்தமான சிரப்புகளுக்கு உலக சுகாதார அமைப்பு தனது முதல் மருத்துவ தயாரிப்பு எச்சரிக்கையை எழுப்பியபோது முதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. காம்பியாவில் இந்த சிரப்பை உட்கொண்ட 70 குழந்தைகள் இறந்தனர். இதேபோல், நொய்டாவை தளமாகக் கொண்ட மரியான் பயோடெக் தயாரித்த இரண்டு சிரப்களுடன் தொடர்புடைய கடுமையான சிறுநீரக பாதிப்பு காரணமாக குறைந்தது 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்து இருந்தது.
இந்தோனேசியாவில் இதேபோன்று 8 அசுத்தமான சிரப்களை உட்கொண்டவர்களில் கடுமையான சிறுநீரகக் காயம் காரணமாக சுமார் 200 குழந்தைகள் இறந்தனர். மேலும், மைக்ரோனேசியா மற்றும் மார்ஷல் தீவுகளில் காணப்படும் அசுத்தமான பொருட்களுக்கு ஆஸ்திரேலிய மருந்து கட்டுப்பாட்டாளரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மருந்துகளை பஞ்சாப்பை தளமாகக் கொண்ட க்யூ.பி பார்மகெம் நிறுவனம் தயாரித்தது. அவர்கள் இந்த நாடுகளுக்கு தங்கள் சிரப்பை ஏற்றுமதி செய்யவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு செய்தி வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.