கேரளாவில் தென்மேற்கு மழை
கேரளா மழை வெள்ளம் : வரலாறு காணாத அளவு பெய்த மழையால் இதுவரை பலத்த பாதிப்பினையும் சேதரத்தினையும் சந்தித்துள்ளது கேரளா. இந்த வருடம் கேரளாவில் பெய்த தென்மேற்கு மழையானதை யாரும் எதிர்பார்க்கவில்லை. 78 நாட்கள் நீடித்த இந்த மழைக்காலத்தில் 65 நாட்கள் கேரளாவில் மழை கொட்டித்தீர்த்தது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் சராசரி மழைப் பொழிவினை விட 9 மடங்காக மழை பெய்திருக்கிறது கேரளாவில்.
ஆகஸ்ட் 16ம் தேதி பெய்த மழை, பல வருடக்கணக்கெடுப்பிலும் இல்லாத அளவிற்கு மழைப் பொழிவினை கொடுத்த நாளாகும். அதே நாளில் தான் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்கள்
இம்மழையில் பெரும் அளவு பாதிப்பினை சந்தித்த மாவட்டங்கள் இடுக்கி, எர்ணாக்குளம், பாலக்காடு, மற்றும் மலப்புரம் ஆகும். ஆனாலும் தொடர்ந்து நிரம்பிய அணைகள் மற்றும் அதன் உபரிநீர் வெளியீட்டால் மட்டும் 14 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
42% சராசரி மழைப்பொழிவினைவிட அதிக மழைப்பொழிவை பெற்றது கேரளா. ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரையில் மட்டும் கொல்லம் மாவட்டம் 527 மிமீ மழைப்பொழிவை பெற்றுள்ளது. இடுக்கியில் 438 மிமீ மழை பொழிந்துள்ளது. மலப்புரம் 399 மிமீ மழை பொழிந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் அளித்த நிதி உதவி பற்றி அறிந்து கொள்ள
கேரளா மழை வெள்ளம் - நிரம்பிய அணைகள்
கேரளாவில் 6 பெரிய அணைக்கட்டுகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமானவை இடமலையாறு மற்றும் இடுக்கி. ஒரு பில்லியன் க்யூபிக் மீட்டருக்கும் மேலான கொள்ளவைக் கொண்ட அணைகள் இவை. ஜூலை மாத இறுதிக்குள் கேரளாவில் இருந்த அனைத்து சிறய மற்றும் பெரிய நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இடுக்கி அணை சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பின.
மழைக்காலம் முடிந்த பின்பு விவசாயத் தேவைக்காகவும் குடிநீருக்காகவும் எப்போதும் அணைகளை திறந்து வைக்காமல் இருப்பது வழக்கம். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வேறு வழியில்லாமல் அணைகளின் மதகுகள் எல்லாம் திறந்துவிடப்பட்டன. முல்லைப் பெரியாறு அணையின் மதகுகளும் திறந்து விடப்பட்டதால் இடுக்கி மாவட்டம் முழுவதும் வெள்ள நீரால் முழுகியது.
கேரளாவின் புவியியல் அமைப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கேரளா. கேரளாவில் இருக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் அனைத்தும் மலைப்பாங்கான பகுதியில் தான் அமைந்திருக்கிறடது. இங்கு பெய்யும் மழையானது ஆறுகளில் கலந்து மேற்கில் பயணித்து அரபிக் கடலில் கலக்கிறது. பெய்யும் மழையானது ஆறுகளில் பயணிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை.
செண்டரல் வாட்டர் கமிசன் உத்திரப் பிரதேசம் மற்றும் பிஹாரில் இருப்பது போல் அணைகள் மேலாண்மை மற்றும் தகவல்களை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னால் கேரளாவில் கூற இயலவில்லை. அணைகளின் நிலவரம் அனைத்தும் 3 அல்லது நான்கு மணி நேரத்திற்கு முன்பே கூறப்படுகிறது. அதே போல் வானிலை அறிக்கையை ஆராய்ந்து சொல்லும் மையம் கேரளாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் மழையின் காரணமாக பெருத்த சேதாரத்தை சந்தித்துள்ளது. கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கொச்சின் விமான நிலையம் வருகின்ற 26ம் தேதி வரை மூடப்படுள்ளது.
குரஞ்செரி, திருச்சூர்
கேரளா மழை வெள்ளம் காரணமாக ஆகஸ்ட் 16ம் தேதி திருச்சூர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு நான்கு வீட்டினை தரைமட்டம் ஆக்கியது. மீட்புப் பணிகளில் ஈடுபட்ட போது 4 பேரை உயிருடன் மீட்டனர் ராணுவத்தினர். 12 பேரை சடலமாக மீட்டார்கள். மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வளவு துயரமான சம்பவம் இந்த தென்மேற்கு பருவ காலத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தீவிரமான மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக் கிழமை மாலை நிலவரப்படி இந்த மண் சரிவிற்கு 18 நபர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடப்பதக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.