Kaunain Sheriff M
Tracking variants : ஓமிக்ரான் உள்ளிட்ட புதிய மாறுபாடுகளை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்வதற்கான அதன் மரபணு வரிசைமுறை நடவடிக்கைகளை கடுமையாக்கும் வகையில், கர்நாடகாவின் தார்வாட் மற்றும் மகாராஷ்டிராவின் தானே பகுதிகளில் ஏற்பட்ட கொரோனா வெடிப்பை தொடர்ந்து கொரோனா தொற்று ஹாட்ஸ்பாட்களில் இருந்து பெறப்படும் சோதனை மாதிரிகள் அனைத்டையும் அனுப்பி வைக்குமாறு மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் ஜீனோம் வரிசைப்படுத்தலுக்காக பாசிட்டிவ் மாதிரிகள் அனைத்தையும் NSACOG ஆய்வகங்களுக்கு உடனடியாக அனுப்புமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது. இதற்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகள் மூலம் பெறப்பட்ட பாசிட்டிவ் மாதிரிகளில் 5% மட்டுமே ஜீனோம் வரிசைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலில் கொரோனா தொற்று அதிகமாக தற்போது பதிவு செய்யப்பட்ட கர்நாடகாவின் தார்வாட் மருத்துவக்கல்லூரியில் இருந்தும் தானே பிவண்டியில் அமைந்திருக்கும் முதியோர் இல்லத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை அனுப்ப மத்திய அரசு அதிகாரிகளுக்கு கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸிடம் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாநிலங்களில் எந்த பகுதிகளில் எல்லாம் கொரோனா தொற்று அதிகமாக பதிவு செய்யப்படுகிறதோ அங்கிருந்து 100% மாதிரிகளை ஜீனோம் வரிசைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தார்வாடில் ஒரே இடத்தில் 240 வழக்குகள் பதிவான நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் பிவண்டியில் 60க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் முதியோர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்தும் மாதிரிகள் பெறப்பட்டன. இது போன்று அளவுக்கதிகமாக மக்கள் பாதிப்படையும் போது நாங்கள் ஜீனோம் வரிசைப்படுத்தலை கட்டாயமாக்கியுள்ளோம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நாடுகளில் இருந்து திரும்பி வந்துள்ள பயணிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரா என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. ஒருவர் கொரோனா தொற்று நெகடிவ் ரிசல்ட்டை பெற்றால் 8 நாட்கள் கழித்து மீண்டும் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. மாநில நிர்வாகத்தின் கீழ் அவர்கள் நேரடியாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நாடுகளில் இருந்து திரும்பி வரும் பயணிகள் இணைப்பு விமான சேவைகளில் டிக்கெட் புக் செய்ய வேண்டாம் என்றும், சோதனை முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சந்திப்பின் போது, ICMR D-G டாக்டர் பல்ராம் பார்கவா, RT-PCR மற்றும் Rapid Antigen சோதனைகளில் இருந்து ஒமிக்ரான் தப்பவில்லை என்று கூறியுள்ளார். "ஹர் கர் தஸ்தக்" பிரச்சாரம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil