புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த
முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரிஜேந்திர குமார் யாதவ், "குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை புதுவை வர உள்ளார். அவரது பயணத்தின்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குடியரசு தலைவர் செல்லும் நேரத்தில் சம்மந்தப்பட்ட சாலைகளில் எந்த வித வாகனமும் இயக்க அனுமதி இல்லை.
குடியரசு தலைவர் செல்லும் சாலையில் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை.
மேலும் சாலையோர கடைகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.
இதேபோல், கடற்கரை சாலை, தூய்மாவீதி, செயின்ட் லூயிஸ் வீதி, பு்ஸ்சி வீதியில் இருந்து ஆம்பூர் சாலை முதல் கடற்கரை சாலை வரையும், நேரு வீதியில் ஆம்பூர் சாலை முதல் செயின்ட் வீதி வரையிலும் வாகனங்கள் இல்லா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் ஜனாதிபதி செல்லும் நேரத்தில் வெளியில் வர வேண்டாம். ஜனாதிபதி வரும் நேரத்தில் டிரோன்களுக்கு அனுமதி இல்லை" என்றார்.
பேட்டியின்போது போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர்கள் மோகன்குமார், மாறன் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“