புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு,நகர பகுதிகளில் நாளை மதியம் 12 முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறை படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
இதனிடையே, விநாயகர் சிலை கரைப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தினை அமைதியான முறையில் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊர்வலத்தின் போது பிற மத வழிபாட்டு தலங்கள் அருகே கோஷங்கள் எழுப்புவது, பட்டாசுகள் வெடிப்பது போன்ற செயல்கள் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, புதுச்சேரி நகர பகுதிகளில் நாளை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதுச்சேரி நகர பகுதிகளான அண்ணா சாலை, காமராஜர் காலை, ஆம்பூர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதித்து புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நாளை மதியம் 12 முதல் மாலை 5 வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“