Advertisment

இந்து அல்லாத பணியாளர்களை மாற்ற திருப்பதி தேவஸ்தானம் முடிவு; அரசியல் பேச்சுக்கும் தடை

இந்துக்கள் அல்லாதவர்கள் இடமாற்றம், அரசியல் பேச்சுக்கு தடை, லட்டுக்கு நல்ல நெய் வாங்க டெண்டர்; திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தான வாரியம் முடிவு

author-image
WebDesk
New Update
Tirupati temple xyz

Sreenivas Janyala

Advertisment

திருமலையின் வெங்கடேஸ்வரா கோவிலில் தரிசன நேரத்தை இரண்டு முதல் மூன்று மணி நேரமாகக் குறைப்பதற்கான செயல் திட்டத்தை பரிந்துரைக்க வல்லுநர் குழுவை அமைத்தல்; அங்கு அரசியல் அறிக்கைகள் வெளியிட தடை; லட்டு தயாரிப்பதற்கு உயர்ந்த தரமான நெய் கொள்முதல்; மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களை இடமாற்றம் செய்வது - திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) புதிய தலைவர் பி.ஆர் நாயுடுவின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இவை. ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலை நிர்வகிக்கும் வாரியம் திருப்பதி தேவஸ்தானம் ஆகும்.

ஆங்கிலத்தில் படிக்க: Transfer non-Hindus, ban political speeches, get better ghee for laddus – board that manages Lord Venkateswara temple takes spate of decisions

ஜூன் மாதம் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த முதல் கூட்டம் இதுவாகும். தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ் கூறுகையில், வெங்கடேஸ்வரா தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும், இது சில நேரங்களில் 20 மணிநேரம் வரை இருக்கிறது. இதற்காக, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பக்தர்களின் நெரிசலைக் குறைப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் வழிகளை பரிந்துரைக்க, தேவஸ்தானம் நிபுணர்கள் குழுவை அமைக்கும் என்றார்.

திருமலையில் பணிபுரியும் இந்துக்கள் அல்லாதவர்கள் குறித்து தகுந்த முடிவு எடுக்குமாறு மாநில அரசுக்கு கடிதம் எழுதவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்று சியாமளா ராவ் கூறினார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கோவிலில் பணிபுரியும் இந்து அல்லாத பிற மத ஊழியர்களுக்கு மற்ற அரசு நிறுவனங்களில் மாற்றுப்பணி அளிக்கப்பட வேண்டும் அல்லது விருப்ப ஓய்வு (VRS) வழங்கப்பட வேண்டும் என்று தேவஸ்தானம் விரும்புகிறது. இது அனைத்து கோயில் ஊழியர்களும் தேவஸ்தானத்தின் மத மற்றும் ஆன்மீக விழுமியங்களுடன் இணைந்திருப்பதை உறுதி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பிரிவின் கீழ் சிறப்பு நுழைவுச் சீட்டுகள் வழங்குவதில் முறைகேடுகள் குறித்த புகார்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, ஆந்திர சுற்றுலாக் கழகத்தின் பல்வேறு மாநிலங்களின் ‘தர்ஷன்’ ஒதுக்கீட்டை ரத்து செய்யவும் தேவஸ்தான வாரியம் முடிவு செய்துள்ளது.

கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு அரசியல்வாதிகள் அறிக்கைகள் அல்லது உரைகளை வழங்குவதைக் குறிப்பிட்டு, திருமலையில் அரசியல் சார்பு பாராமல் இதுபோன்ற அறிக்கைகள் அல்லது பேச்சுகளை தேவஸ்தான வாரியம் தடை செய்துள்ளது. "அப்படிப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களைப் பிரச்சாரம் செய்பவர்கள் மீது தேவைப்பட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சியாமளா ராவ் கூறினார்.

சில வாரிய உறுப்பினர்களின் கவலைகளுக்கு மத்தியில், தேவஸ்தானம் தனது அனைத்து சேமிப்பு டெபாசிட்களையும் தனியார் வங்கிகளில் இருந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

மேலும், புகழ்பெற்ற லட்டுகள் உட்பட பிரசாதங்களைத் தயாரிப்பதற்கு உயர்ந்த தரமான நெய்யை வாங்குவதற்கு தேவஸ்தானம் மீண்டும் டெண்டர் கோர வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், திருமலை வெங்கடேஸ்வரா கோவிலில் லட்டு 'பிரசாதத்தில்' பயன்படுத்தப்படும் பொருட்களின் "தூய்மை" குறித்து ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசு சந்தேகம் எழுப்பியபோது சர்ச்சை ஏற்பட்டது.

ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்கு முன் கடவுளுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகள் மற்றும் காய்கறிகளின் கொழுப்பு கலந்திருப்பதாக பொது ஆய்வக அறிக்கைகளை வெளியிட்டார்.

இந்த ஆண்டு அக்டோபர் 4 முதல் 13 வரை நடைபெற்ற வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் போது சிறப்பு சேவை செய்த ஊழியர்களுக்கு ரொக்க வெகுமதியில் 10 சதவீதம் உயர்த்த தேவஸ்தான வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tirupati Tirupathi Devasthanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment