Transgender Bill : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த அமைச்சரவையில் திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மசோதா விரைவில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகியவற்றில் திருநங்கைகளுக்கு பாகுபாடு காட்டக்கூடாது என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மசோதாவில் திருத்தம் கொண்டுவர நாடுமுழுவதும் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களின் நீண்டகால கோரிக்கை கூடிய விரைவில் சட்டமாகிறது. திருநங்கைகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுதல் உள்ளிட்டவை தண்டனைக்குரியதாக கருதப்படும். இதன் மூலம் திருநங்கைகள் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் அதிகாரம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, லேசர் சிகிச்சை அல்லது திருநங்கைகளின் உடல்நலம் தொடர்பான மருத்துவ செலவுகளை அரசாங்கமே உதவி செய்ய்யும்.திருநங்கைகளுக்கு ஒரு தேசிய கவுன்சில் அமைக்கப்படலாம், சட்டத்தின் கீழ், தொடர்புடைய கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கவும், குறை தீர்க்கவும இந்த கவுன்சில் அமைப்பு உதவும்.
சமூகத்தில் பாகுபாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சனைக்களை திருநங்கைகள் அதிகளவில் சந்திப்பித்தாக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டது. இதுக் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ “இந்த மசோதா ஏராளமான திருநங்கைகளுக்கு பயனளிக்கும், ஒதுக்கப்படும் பிரிவுக்கு எதிரான பாகுபாடு மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றில் இருந்து அவர்களை புறம் தள்ளி நீரோட்டத்திற்குள் கொண்டு வரும்” என கூறப்பட்டுள்ளது.
திருநங்கைகள் மற்றும் இன்டர்செக்ஸ் நபர்களின் உரிமைகளை கோடிட்டுக் காட்டும் மற்றும் அவர்களின் பாதுகாப்பு மசோதா 16 வது மக்களவை அமைச்சர்களால் 27 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.