மெஹர் கில்
transgenders’ rights Bill says: மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019, ஜூலை 19 ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவில் திருநங்கைகள் பிச்சை எடுப்பதை குற்றமாக்கிய சர்ச்சைக்குரிய விதி மசோதாவில் இருந்து நிக்கப்பட்டது.
மாற்றுப்பாலினத்தவர்கள் யார்?
இந்த மசோதா மாற்றுப்பாலினத்தவர் யார் என்பதை வரையறை செய்கிறது. அதன்படி, பிறப்பின் மூலம் அறியப்பட்ட பாலினம் அவன்/அவள் தன்னை உணரும் பாலினத்துடன் பொருந்தாதது. இது திருநம்பிகள்(ஆணாக மாறியவர்), திருநங்கைகள்(பெண்ணாக மாறியவர்) உள்ளடக்கியது. “(அத்தகைய நபர் பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை அல்லது லேசர் சிகிச்சை அல்லது வேறு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாரா இல்லையா என்று குறிப்பிடுகிறது) பால் மாறுபாடு உடைய நபர், தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ குறிப்பிடாத பாலினத்தவர், கின்னர், ஹிஜ்ரா, அரவானி, ஜோக்தா போன்ற சமூக கலாச்சார அடையாளங்களைக் கொண்ட நபர் என்று வரையறை செய்கிறது.
ஒரு மாற்றுப் பாலினத்தவர் சுயமாக பாலின அடையாளம் காண்பதற்கு உரிமை உள்ளது. இந்த மசோதா கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, மற்றும் சேவைகளில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு எதிரான புறக்கணிப்பு, மற்றும் அவர்களை தவறாக நடத்துதல் ஆகியவற்றை தடை செய்கிறது.
பி.ஆர்.எஸ். சட்டமன்ற ஆய்வின்படி, ஒவ்வொரு மாற்றுப் பாலினத்தவரும் தங்கள் வீடுகளில் இருக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை குடும்பத்தினர் அவர்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த நபரை அவன்/அவள் ஒரு மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கலாம்.
அரசாங்கம் மாற்றுப் பாலினத்தவருக்கு கல்வி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை வழங்கும். மசோதாவின்படி, தனியாக எச்.ஐ.வி கண்காணிப்பு மையம், பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளும் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும். ஒரு நல்ல அரசாங்கம் மாற்றுப்பாலினத்தவர்களை முறைப்படுத்த வேண்டும். மேலும், அவர்களுக்கு இழிவுபடுத்தாத, பாகுபாடற்ற நலத்திட்டங்களை, திட்டங்களை வழங்க வேண்டும் என்று இந்த மசோதா குறிப்பிடுகிறது. மேலும், மாற்றுப் பாலினத்தவர்களை மீட்பதற்கும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மசோதா குறிப்பிடுகிறது.
குறைதீர்க்கும் வழிமுறைகள்
விதிமுறைகளை மீறுவது தொடர்பான புகார்களைக் கையாள ஒவ்வொரு நிறுவனமும் புகார் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது.
அடையாள சான்றிதழ் என்றால் என்ன?
ஒரு மாற்றுப்பாலினத்தவர் மாவட்ட நீதிபதிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். அவர் மாற்றுப் பாலினத்தவர் அடையாளச் சான்றிதழ் வழங்குவார். அடிப்படையில், இந்த சான்றிதழ் மாற்றுப்பாலினத்தவர் என்பதற்கான சான்றாக இருக்கும். இது அவர்களுடைய பாலினத்தை மாற்றுப் பாலினத்தவர் என்று காட்டும். இதன் விளைவாக சான்றிதழில் காட்டப்படும் அந்த நபரின் பாலினம் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்படும். ஒரு வேளை அவர் 18 வயது நிரம்பாதவராக இருந்தால், அத்தகைய விண்ணப்பம் அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரால் செய்யப்பட வேண்டும். மாற்றுப் பாலினத்தவர் ஒருவர் தனது பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டால் மட்டுமே திருத்தப்பட்ட சான்றிதழ் பெற தகுதியுடையவர்.
மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசிய கவுன்சில் என்றால் என்ன?
மாற்றுப் பாலினத்தவர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019-இன் விதிகள் மற்றும் அதன் நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய அரசு மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசிய கவுன்சில் (NCD) நியமனம் செய்யப்படும். இந்த அமைப்பு மத்திய சமூக நீதித்துறை அமைச்சரை தலைவராகவும், மாநில சமுக நீதித்துறை அமைச்சரை துணை தலைவராகவும், சமூக நீதித்துறை அமைச்சகத்தின் செயலர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை, உள்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகிய அமைச்சரகங்களில் இருந்து ஒரு பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும்.
நிதி ஆயோக் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிகளும் மாற்றுப் பாலினத்தவர்களைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும், தொண்டு நிறுவனங்களில் இருந்து 5 நிபுணர்களும் இதில் சேர்க்கப்படுவார்கள்.
இந்த அமைப்பு மாற்றுப் பாலினத்தவர்களுக்காக மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களைக் கண்காணித்து மறு ஆய்வு செய்து அறிவுறுத்தும்.
மசோதாவின் கீழ் குற்றமும் தண்டனையும்
எந்த ஒரு நபரும் மாற்றுப் பாலினத்தவரை கொத்தடிமையாக வைத்திருப்பது கண்டறியப்பட்டால், (அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டாய சேவையைத் தவிர்த்து) ஒரு மாற்றுப் பாலினத்தவர் பொதுப்பாதையில் செல்ல மறுக்கப்பட்டால், அவர் வசிக்கும் இடத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டால், அல்லது அவரை உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, வாய்மொழியாகவோ, பொருளாதார ரீதியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ தவறாகப் பயன்படுத்தினால் குற்றம் இழைத்தவருக்கு 6 மாதங்களுக்கு குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்படலாம். இந்த சிறை தண்டனை 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம். மேலும், குற்றம் இழைத்தவருக்கு கு அபராதமும் விதிக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.