Cab driver convinces US national Delhi is shut : இந்தியாவைச் சுற்றி பார்க்க வந்த அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த ஜார்ஜ் வான்மீட்டரை, பண்டிகை காலம் என்பதால் டெல்லிக்கு விடுமுறை என்று நம்ப வைத்து 90,000 வரை ஏமாற்றிய டாக்ஸி ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 18ம் தேதியன்று டெல்லியின் பிரபலமான இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்திறங்கினார் ஜார்ஜ் வான் மீட்டர். இவர் தான் பஹர்கஞ்ச் ஏரியாவில் புக் செய்த ஓட்டலுக்கு செல்வதற்காக ராம் ப்ரீத்தின் வாகனத்தில் ஏறி இருக்கிறார். டாக்ஸியில் இருவரும் கொனாட் பிளேஸின் அருகில் உள்ள சாலையில் சென்ற போது போலிஸ் தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய டாக்ஸி ஓட்டுநர், பண்டிகை காலம் என்பதால் டெல்லி முழுவதும் ப்ளாக் செய்யப்பட்டுள்ளது. இதனால், நீங்கள் புக் செய்திருக்கும் ஓட்டலுக்கு செல்ல முடியாது என்று நம்பவும் வைத்துள்ளார்.
ராம்ப்ரீத் பிறகு அந்த அமெரிக்கா சுற்றுலா பயணியை இன்னொரு சுற்றுலா ஏஜென்ட்டிடம் கூட்டிச் சென்று, ஆக்ராவில் உள்ள ஒரு உயர்தர ஓட்டலை புக் செய்து கொடுத்துள்ளனர். அந்த, ஆக்ரா ஓட்டலுக்கு சென்ற பிறகு தான் புக் செய்திருந்த பழைய ஓட்டலுக்கு போன் செய்து ரீபண்ட் கேட்டபோது தான், டாக்ஸி ஓட்டுநராலும், சுற்றுலா ஏஜன்டாலும் தான் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்ற தகவலை.
பிறகு,டெல்லி காவல் துறையினரிடம் முறைப்படி புகார் அளித்துள்ளார். சுற்றுலா பயணிகளுக்கு எதிராக முறைகேடுகளைத் தவிர்க்கும் சட்டம், 2010 ன் கீழ் ராம் ப்ரீத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜார்ஜ் வான்மீட்டர் இதுகுறித்து, காவல் துறையினரிடம் தெரிவிக்கையில், " கொனாட் பிளேஸின் சாலையில் எனது போன் வேலை செய்யாததால், எனக்கு பதிலாக பஹர்கஞ்ச் ஓட்டலுக்கு ராம் ப்ரீத்தை போன் செய்தார். விடுமுறைக் காலம் என்பதால், ஓட்டலுக்கு வரும் சாலைகள் எல்லாம் செயல்படாது என்று அந்த ஓட்டல் பதில் அளித்ததாக என்னிடம் உறுதிபடுத்தினர். அந்த சுற்றுலா ஏஜென்ட்டும் நீங்கள் புக் செய்திருக்கும் ஓட்டலுக்கு செல்ல முடியாது என்று தெரிவித்தனர். இதானல், எனது இந்தியாவின் சுற்றுப் பயணத்தை மீண்டும் அவர்களிடம் புக் செய்தேன். ஒரு நாள் இரவுக்கு 450 டாலர் கட்டணம் வாங்கும் ஓட்டலை நிர்பந்தபடுத்தி ஏற்பாடு செய்துக்கொடுத்தனர்" என்றார்.