Advertisment

டெல்லி உட்பட வட இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

கடந்த 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு 10,000 பேர் இறந்தனர்

author-image
WebDesk
New Update
Earthquake

நிலநடுக்கத்திற்குப் பிறகு நேபாளத்தின் பஜாங் மாவட்டத்தில் கட்டிடங்கள் சேதம் அடைந்த காட்சிகள்

ஆங்கிலத்தில் படிக்க

Advertisment

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் முன்பு நேபாளத்தில் ஏற்பட்டு வரும்  சக்திவாய்ந்த நிலநடுக்கம், இந்தியாவின் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களுக்கு மிக அருகில் உருவாகி இருந்த நிலையில், இன்று (அக்-03)  பிற்பகல் வட இந்தியா முழுவதும் வலுவான நிலநடுக்கத்தைத் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலகடுக்கம் உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத்தில் இருந்து தென்கிழக்கே 200 கிமீ தொலைவிலும், லக்னோவிற்கு வடக்கே 280 கிமீ தொலைவில் உள்ள பகுதியில் அரை மணி நேரத்திற்குள் மதியம் 2.25 மணி மற்றும் 2.51 மணி என அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இதில் முதல் நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், இரண்டாவது 6.2 என்ற ரிக்டர் அளவிலும் பதிலானதாக டெல்லியில் உள்ள நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

வட இந்தியாவில் நிலநடுக்கம் உணரப்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். இது மிகவும் வலுவான நிலநடுக்கமாகும், இது பூமியின் மேற்பரப்பிலிருந்து ஐந்து கி.மீ கீழே ஏற்பட்டு,  சேதம் மற்றும் அழிவை ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று பிற்பகல் லக்னோ, கான்பூர் மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற மாவட்டங்களில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

உ.பி.யின் நேபாள எல்லை மாவட்டங்களில், பிலிபிட், லக்கிம்பூர் கெரி, பஹ்ரைச், ஷ்ரவஸ்தி மற்றும் பல்ராம்பூர் மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த மாவட்டங்களில் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரகாண்டில், டேராடூன், பித்தோராகர், தெஹ்ரி கர்வால், உதம் சிங் நகர், நைனிடால் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

ஹல்த்வானி மற்றும் உதம் சிங் நகரில் நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர் மற்றும் சில இடங்களில் கடைக்காரர்களும் தங்கள் கடைகளை விட்டு வெளியேறினர். ஆனால் இந்த நிலநடுக்கத்தாால் மாநிலத்தில் எந்த இடத்திலும் இதுவரை கட்டிடங்கள் சேதம் எதுவும் பதிவாகவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு 10,000 பேர் இறந்தனது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Delhi earthquake
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment