scorecardresearch

சமூக செயற்பாட்டாளர், பாதிரியார் ஸ்டான் சுவாமி மும்பையில் மரணம்

காடு மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக ஆதிவாசி சமூகங்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து 3 தசாப்தங்களுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் பணியாற்றியுள்ளார்.

ஸ்டேன் சுவாமி, பீமா கோரேகன்

Tribal rights activist Stan Swamy dies at 84 : பழங்குடி செயல்பாட்டாளரான பாதிரியார் ஸ்டான் சுவாமி மும்பையில் இன்று காலமானார். எல்கார் பரிஷாத் வழக்கில் கைது செய்யப்பட்ட அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவருக்கு ஹோலி ஃபேமலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார் என்ற தகவலை மும்பை உயர் நீதிமன்றத்திற்கு அளித்துள்ளனர் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.

நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்து அவர் செயற்கை ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஸ்டானின் மருத்துவ நிலையை கருத்தில் கொண்டு பெயில் வழங்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர்கள் இன்று காலை மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மாவோயிஸ்ட் தொடர்பா? என்.ஐ.ஏ கைது செய்த 83 வயது ஸ்டான் ஸ்வாமி யார்?

இன்று காலை 04:30 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவருக்கு நினைவு திரும்பவில்லை. இன்று பகல் 1.24 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக அம்மருத்துவமனையின் இயக்குநர் ஐயான் டிசோசா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பார்கின்சன்ஸ் நோய் மற்றும் நுரையீரல் தொற்றின் காரணமாக அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் கட்டளைப்படி அனைத்து பணிவுடனும், இந்த செய்தியைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். கடைசி விசாரணையின் போது, அவரின் விருப்பப்படி மருத்துவமனையில் தங்க அனுமதி வழங்கப்பட்டது. எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தையில்லை என்று மும்பை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே கூறினார்.

ஸ்டான் நேற்று மூச்சுவிட அதிகம் சிரமம் எடுத்துக் கொண்டதாலும், ஆக்ஸிஜன் அளவு ஏற்ற இறக்கமாக இருந்த காரணத்தாலும் அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது என்று அவருடைய மருத்துவர் மிஹிர் தேசாய் கூறினார். ஸ்வாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி அன்று ராஞ்சியில் கைது செய்யப்பட்டு, தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

அவருடைய உடல் நலனை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்றின் காரணமாக இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது. “நக்சல்கள்” என்று பெயரிடப்பட்ட ஆயிரக்கணக்கான இளம் ஆதிவாசிகளை கண்மூடித்தனமாக கைது செய்வதை சவால் செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்றும், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்டுகள்) உடன் அவர் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி விசாணை முகமைகளுக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஜாமீனில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

மே 30ம் தேதி அன்று அவர் ஹோலி மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதற்கு முன்பு மும்பை உயர் நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் தலோஜா ஜெயிலில் இருந்து ஆஜரானார். அவர் சிறைக்கு அழைத்து வரப்படுவதற்கு முன்பு அவர் உடல்நிலை சரியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது என்றும் ஆனால் நாளாக நாளாக நிலைமை மோசமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் உண்பது, நடப்பது போன்ற பணிகளை கூட பிறரின் உதவியின்றி செய்ய முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Tribal rights activist stan swamy dies at 84 breathed his last in mumbai