Advertisment

நேதாஜி பெயரில் அரசியல்: 3-வது ஆண்டாக முட்டும் பா.ஜ.க - மம்தா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழாவை கொண்டாட மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் (டிஎம்சி) பாஜகவும் மூன்றாவது ஆண்டாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

author-image
WebDesk
New Update
Trinamool and BJP wrangle over Netaji, For third year tamil news

Sources in the RSS said Mohan Bhagwat will be in West Bengal on a five-day tour beginning January 18 and the event on Netaji Subhas Chandra Bose's birth anniversary will also be attended by noted personalities from West Bengal and neighbouring states. (Express file photo by Partha Paul)

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23 ஆம் தேதி "பராக்ரம் திவாஸ் (வீர நாள்)" என்று கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், நேதாஜியை, சட்டசபை தேர்தலுக்கு முன், நரேந்திர மோடி அரசு, அரசியல் முட்டுக்கட்டையாக பயன்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

Advertisment

கடந்த ஆண்டு டெல்லியில் நடைப்பெற்ற குடியரசு தின அணிவகுப்பில், நேதாஜியின் 125வது பிறந்தநாளில் மற்றும் அவரது ராணுவத்தின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில்,

மேற்கு வங்க அரசு முன்மொழியப்பட்ட அட்டவணை அமைத்தது. ஆனால், அந்த முன்மொழியப்பட்ட குடியரசு தின அட்டவணை மத்திய அரசால் கைவிடப்பட்டது. இதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். ஆனால், முறையான பதில் கிடைக்கவில்லை. பின்னர், கடந்த செப்டம்பரில், இந்தியா கேட்டில் 28 அடி நேதாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து இருந்தார்.

publive-image

இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் (ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கின்) தலைவர் (சர்சங்கசாலக்) மோகன் பகவத், நேதாஜிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொல்கத்தாவில் உள்ள ஷாஹித் மினார் என்ற இடத்தில் நடக்கவிருக்கும் பேரணியில் உரையாற்றுகிறார். இது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் முக்கியமான தேர்தல் தொகுதியாக விளங்கும். வங்காள நடுத்தர வர்க்கத்தினரிடையே தனது நிலையை உறுதிப்படுத்த உதவும் என்று பாஜகவின் உட்கட்சியினர் கருதுகின்றனர். நேதாஜி போன்ற பான்-பெங்கால் சின்னத்தின் பிரபலம், எதிர்வரும் உள்ளாட்சித் (பஞ்சாயத்துத்) தேர்தலுக்கு முன்னதாக பாஜக பயனடையும் என்றும் நம்புகிறது.

publive-image

ஜனவரி 18 ஆம் தேதி முதல் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக பகவத் மேற்கு வங்கத்தில் இருப்பார் என்றும், நேதாஜியின் பிறந்தநாள் நிகழ்வில் மேற்கு வங்கம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பகவத் வருகை குறித்த செய்திக்கு பாஜக அல்லாத கட்சிகள் சந்தேகத்துடன் பதிலளித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜெய்பிரகாஷ் மஜும்தார் கூறுகையில், “2021ஆம் ஆண்டு நேதாஜியின் பிறந்தநாள் விழா விக்டோரியா நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்த நிகழ்வில் என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. நேதாஜிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறதா அல்லது பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்பாக அரசியல் பலன்களைப் பெற இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. நேதாஜிக்கு ஆர்எஸ்எஸ் மரியாதை காட்டாததால், பகவத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஆச்சரியமாக உள்ளது. சுதந்திரத்திற்கு முன் நேதாஜி சந்திக்க மறுத்த வீர் சாவர்க்கரை அவர்கள் எப்போதும் தீவிரப் பின்பற்றுபவர்கள்." என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி ஆர்எஸ்எஸ் மற்றும் டிஎம்சி ஆகிய இரண்டையும் குறிவைத்து பேசியுள்ளார். “மோகன் பகவத் இங்கு வந்து நிகழ்ச்சிகளை நடத்த இலவசம். மம்தா பானர்ஜியின் ஆதரவில் வங்காளத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ந்து வருகிறது. சங்கத்திற்கு எல்லாம் நல்லதுதான்.

ஆனால் அவர்கள் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துவது ஆச்சரியமாக இருக்கிறது. நேதாஜி மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் துருவங்கள். ஆர்.எஸ்.எஸ் எப்போதும் சியாமா பிரசாத் முகர்ஜியை புகழ்ந்து வருகிறது, நேதாஜி எப்போதும் முகர்ஜிக்கு எதிரானவர். பிறகு, நேதாஜியின் சித்தாந்தத்தைப் பற்றி மோகன் பகவத் எப்படிப் பேசுவார்? அவர்கள் இப்போது தங்கள் அரசியல் நோக்கத்திற்காக நேதாஜியை புகழ்ந்து பேசுகிறார்கள்." என்று கூறினார்.

மற்றொரு மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கூறும்போது, ​​“பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் வங்காளத்துக்காக மட்டுமின்றி நம் நாட்டிற்காகவும் இதைச் செய்கின்றன. அவர்கள் ஒரு ‘இந்து நேதாஜி’யைப் பிரச்சாரம் செய்ய விரும்புகிறார்கள் மற்றும் மகாத்மா காந்தியின் அகிம்சைக்கு எதிராக அவரது ஆயுதப் போராட்ட முறையை முன்வைக்க விரும்புகிறார்கள். இது ஆபத்தானது” என்றார்.

ஆனால் போட்டியாளர்களின் கவலைகளை நிராகரித்த பாஜக மூத்த தலைவர் ஒருவர், “நேதாஜி வங்காளிகள் மத்தியில் ஒரு முன்மாதிரி ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். நேதாஜியைப் புகழ்வது பெங்காலி இந்து வாக்காளர்களுக்கு உதவும் என்பதால் நமக்குப் பலன் தரும். காங்கிரஸின் காந்திய அணுகுமுறையால், இந்திய வரலாற்றில் நேதாஜியின் இடம் நீர்த்துப் போனது. நரேந்திர மோடியும், பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதைச் சரி செய்ய முயல்கின்றன. அதில் என்ன தவறு?” என்று கூறினார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, “சங்கம் ஒரு அரசியல் அமைப்பு அல்ல. இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. வலுவான மற்றும் வளமான தேசத்தை உருவாக்குவதே சங்கத்தின் பணி. பண்பாட்டு தேசியத்தின் மூலம் இந்த வேலையைச் செய்கிறார்கள். எனவே, இது அரசியலுடன் தொடர்புடையது அல்ல." என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Bjp India Mamata Banerjee West Bengal Rss Rss Mohan Bhagwat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment