கடந்த 1993ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த சுமார் 13 உறுப்பினர்களை இடதுசாரி அமைப்புகள் கொலை செய்துள்ளனர். அப்போது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்கத்தின் முதல்வருமான மம்தா பானர்ஜீ.
அந்த வருடத்தில் இருந்து, கொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தியாகிகள் தினம் கடைபிடிப்பது வழக்கம். இன்றோடு 25 வருடங்கள் நிறைவு பெற்றதை நினைவு கூறும் விதமாக மிகப் பெரிய அளவில் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தியாகிகள் தின ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்
கொட்டும் மழையிலும் பங்கேற்ற கலைஞர்கள் / புகைப்படம் - சஷி கோஷ்
ஊர்வலத்தில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
கொட்டும் மழையிலும் தலைவர்களின் பேச்சினைக் கேட்க ஒன்று கூடிய பொதுமக்கள்
ஊர்வலத்திற்கு எடுத்துவரப்பட்ட மம்தா சிலை முன் நின்று செல்பி எடுக்கும் தொண்டர்கள்
நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்கள் (புகைப்படம் சஷி கோஷ்)
To read the entire article about the Martyr Day Rally in English
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கினை காக்க சுமார் 6000 காவல்துறையினர் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
நிகழ்வில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக 5 கண்காணிப்பு கோபுரங்கள், 100 கண்காணிப்பு கேமராக்கள், 8 அவசர மருத்துவ ஊர்திகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.