டெல்லி ரகசியம்: மக்களவையில் கடும் அமளிக்கிடையே தொலைந்த மோதிரத்தை தேடிய எம்.பி

உடனடியாக, தனது கட்சி எம்பிக்கள் மஹுவா மொய்த்ரா, பிரசூன் பானர்ஜி ஆகியோரிடம் மோதிரம் தொலைந்தது குறித்து கூறியுள்ளார். அவர்கள், அங்கிருந்த மற்ற எம்பிக்களை மோதிரத்தை தேடுமாறு கூறியுள்ளனர்.

மக்களவையில், லக்கிம்பூர் கெரி வழக்கில் தொடர்புடையை அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி முன்னின்று முழுக்கங்களை எழுப்பி கொண்டிருந்தார்.

அப்போது, அவர் கையில் இருந்த மோதிரம் காணவில்லை என்பதை கவனித்துள்ளார். உடனடியாக, தனது கட்சி எம்பிக்கள் மஹுவா மொய்த்ரா, பிரசூன் பானர்ஜி ஆகியோரிடம் மோதிரம் தொலைந்தது குறித்து கூறியுள்ளார். அவர்கள், அங்கிருந்த மற்ற எம்பிக்களை மோதிரத்தை தேடுமாறு கூறியுள்ளனர். மோதிரம் யாருக்கும் கிடைக்காத நிலையில், கீரின் கார்பட்டின் ஓரத்தில் மோதிரத்தை பிரசூன் பானர்ஜி கண்டுபிடித்தார். அதை கல்யானிடம் ஒப்படைத்தார். மோதிரம் கிடைத்த மகிழ்ச்சியில், பிரசூனை கல்யான் கட்டிபிடித்து நன்றி தெரிவித்தார். அதன்பிறகு, கோஷங்கள் எழுப்பும்போதும், கைகளை தூக்கும்போதும் ஜாக்கிரதையாக இருந்தார்.

அனைவரும் வர வேண்டும்… கொறடா வழங்கிய காங்கிரஸ்

34 என மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் வரலாறு காணாத அளவில் குறைவாக உள்ளது. அதிலும், 6 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், காங்கிரஸின் பலம் 28 ஆக உள்ளது. இருப்பினும், 28 உறுப்பினர்களைக் கூட சபையில் வரவழைக்க முடியாத நிலையில் காங்கிரஸ் உள்ளது.

கடந்த வாரம் கட்சி உறுப்பினர்கள் அவையில் இருக்க வேண்டும் என்று மூன்று வரி கொறடா வழங்கியது குறித்து பேசிய தலைமைக் கொறடா ஜெய்ராம் ரமேஷ், “ஒரு சில எம்.பி.க்கள் குறிப்பாக பிற்பகல் அமர்வில் அந்த கொறடாவை பின்பற்றுவதில்லை என தெரிவித்தார். அந்த கொறடாவில், தயவுசெய்து கலந்து கொள்ளுங்கள். கட்சி விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

All party eating

நாடாளுமன்றம் தொடர்ச்சியாக அமளியில் உள்ள நிலையில், பல எம்.பிக்கள் ஒரே இடத்தில் ஒன்றுக்கூடி நட்புடன் நடந்துகொண்டனர். சபை தலைவர் வெங்கையா நாயுடு அண்மையில் திருமணமான தனது பேத்தியை வாழ்த்துவதற்காக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியத் தலைமை நீதிபதி என்வி ரமணா முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் அவையில் இருந்து மற்ற தலைவர்கள், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என பல தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மல்லிகார்ஜுன் கார்கே, சரத் பவார், முலாயம் சிங் யாதவ், ராம்கோபால் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தனிப்பட்ட முறையில் அனைவரையும் வரவேற்ற நாயுடு, இரவு விருந்து சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். மாநிலங்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தும் 34 கட்சிகளுக்குப் பொருத்தமாக, 34 ஆந்திரா உணவு வகைகள் பரிமாறப்பட்டதாக மூத்த எம்.பி ஒருவர் தெரிவித்தார். இதனை All party eating என அழைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trinamool congresss kalyan banerjee search missing ring in loksabha

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com