Trincomalee oil tank project will boost Lanka ties : நீண்ட நாள் கிடப்பில் இருந்த திரிகோணமலை எண்ணெய் கிடங்கு திட்டத்திற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த திட்டம் இருநாட்டு எரிபொருள் பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும் இந்தியா கூறியுள்ளது.
“திரிகோணமலையில் உள்ள எண்ணெய் கிணறுகளை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அறிக்கைகள் கூறுகிறது. இலங்கையுடனான இருநாட்டு உறவில் எரிபொருள் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது” என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.
திரிகோணமலையில் அமைந்திருக்கும் எண்ணெய் கிணறுகளை நவீனமயமாக்குவது குறித்து இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதன் மூலமாக எரிபொருள் சேமிப்பு அங்கே அதிகரிக்கப்படும் அதே நேரத்தில் இருநாட்டு எரிபொருள் பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும் என்றும் பாக்சி தெரிவித்தார்.
திரிகோணமலையில் அமைந்திருக்கும் எண்ணெய் கிணறுகள் தொடர்பான மூன்று ஒப்பந்தங்களையும் மதிப்பீடு செய்தோம். இரு தரப்பினரும் அங்கே கூட்டு வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தும் உடன்படுக்கையை எட்டியுள்ளோம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை அரசு 68 இந்திய மீனவர்களை கைது செய்தது. அதில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியா - இலங்கை கூட்டு செயற்குழு கூட்டத்தை இது தொடர்பாக விரைவிலேயே நடத்த இரு நாட்டினரும் ஆலோசனை செய்து வருவதாக பாக்சி தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil