கொரோனா தடுப்பு நடவடிக்கை : நாட்டிற்கே முன்மாதிரியாக திகழும் திரிபுரா கிராமம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு, தடுப்பு நடவடிக்கைகளில், இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் பொய்ராகி பாரா கிராமம், சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு, தடுப்பு நடவடிக்கைகளில், இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் பொய்ராகி பாரா கிராமம், சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

நோவல் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, திரிபுராவின் பொய்ராகி பாரா கிராமத்தின் பல்வேறு நுழைவுப்பகுதிகளில், சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளில் No Entry என கையால் எழுதப்பட்டுள்ள போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஒரு வாளி தண்ணீர் மற்றும் சோப்புக்கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 250 குடும்பங்கள் உள்ள இந்த கிராமம், கொரோனா நோய் தடுப்பில், இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, 21 நாட்களுக்கு நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, 250 குடும்பங்கள் வசிக்கும் திரிபுரா மாநிலத்தின் பொய்ராகி பாரா கிராமம், மற்ற ஊர்களுடனான தொடர்பில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உலகளாவிய தொடர்பிலிருந்து இந்த கிராமம் தன்னை விடுவித்துக்கொண்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். கைகளை கழுவாமல், யாரும் இந்த கிராமத்தில் நுழைய முடியாது என்பது இதன் தனிச்சிறப்பு.

இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஐசக் கைய்பெங்க் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று, உலகமெங்கும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து எங்களை காப்பாற்றிக்கொள்ள திட்டமிட்டோம். பேசுவதோடு நின்றுவிடாமல், அதனை செயல்படுத்தும் நடவடிக்கைகளிலும் களமிறங்கினோம். கை, கால்களை சானிடைசரால் கழுவாத யாவரும் எங்கள் ஊருக்குள் நுழைய இயலாது. எங்களின் நடவடிக்கைகளை பார்த்த அக்கம் பக்கத்தில் வங்காளம் மற்றும் மலைவாழ் மக்களும் இதே நடைமுறைகளை பின்பற்ற துவங்கியுள்ளனர்.

 

பொய்ராகி கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள நுழைவுப்பாதைகளில் Lockdown Boiragi Para என்றும், No entry without Permission வண்டி, வாகனங்கள் உரிய அனுமதியின்றி உள்ளே நுழையக்கூடாது என்பதை விளக்கும் வகையில் ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த ஊர்ப்பெரியவர் ஷமீர் கலாய் கூறியதாவது, கொரோனா வைரஸ் பீதி உலகையே அச்சுறுத்தி வருவதை அறிந்தோம், இந்த நேரத்தில் நமது பிரதமர் மோடியும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த நோயின் பிடியிலிருந்து எங்களை பாதுகாத்துகொள்ளும் பொருட்டு, இத்தகைய நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

தலைநகர் அகர்தலாவில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொய்ராகி பாரா கிராமம், தன்னையே சுய தனிமைக்குட்படுத்திக் கொண்டுள்ள நிகழ்வு அனைவரையும் அதன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த திரிபுரா மாவட்ட நீதிபதி சந்தீப் நம்தியோ கூறியதாவது, கொரோனா குறித்த விழிப்புணர்வு, இந்த கிராம மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கை கழுவும் நடைமுறையை, இந்த கிராம மக்கள் அனைவரும் தவறாது கடைபிடிக்கின்றனர். தங்களை சுய கட்டுப்பாட்டின் மூலம் அவர்கள் மற்றவர்களையும் இந்த நோயின் தாக்குதல்களிலிருந்து காத்து வருகின்றனர். அவர்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close