திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 48 மணி நேரத்துக்குள் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுவப்பட்ட லெனின் சிலை அகற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு, திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், திரிபுராவில் பாஜக வெற்றி பெற்ற 48 மணி நேரத்திற்குள் அங்கிருக்கும் புரட்சியாளர் லெனின் சிலையை பாஜக ஆதரவாளர்கள் அகற்றியுள்ளனர்.
திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. அதன்பின்பு, தற்போது பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சிக்கு வந்து 48 மணி நேரத்திற்குள்ளாக பெலோனியா நகரில் இருந்த லெனின் சிலையை பாஜகவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் இடதுசாரிகளின் 21 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும்விதமாக கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த சிலையை நிறுவி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்க வெற்றியை கொண்டாடி வரும் பாஜவினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
,
நேற்றைய தினம், தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா இடத்தில், பாஜகவினர் லெனின் சிலை அகற்றப்படும் பொழுது பாரத் மாதா கீ ஜெய் எனவும் கூச்சலிட்டுள்ளனர். பாஜவினரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளனர். இந்நிலையில், பாஜகவின், தேசிய செயலாளர் எச். ராஜா தனது முகநூல் பக்கத்தில் வன்மையைத் தூண்டு வகையில், லெனின் சிலை அகற்றம் குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
,
உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களுக்காக, மார்க்சின் கொள்கைகள் வழி நின்று, குரலெழுப்பிய பொதுவுடைமை தலைவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் தான் புரட்சியாளர் லெனின்.
https://www.facebook.com/HRajaBJP/videos/1548143111969700/