பாஜக தங்கள் கட்சியை வெளிநாடுகளில் விரிவுபடுத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பாக இலங்கை மற்றும் நேபாளத்தில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லவ் தேவ் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
அகர்தலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிப்லவ் தேவ், நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவுபடுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திரிபுராவில் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது நகைச்சுவையாக கூறினார். அந்த நேரத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இருந்தார் என்று பிப்லவ் தேவ் கூறினார். மேலும், தனது தொலைநோக்குத் தலைமை பாஜகவை உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக மாற்றியது என்றும் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தியது என்றும் கூறினார்.
“நாங்கள் அகர்தலா மாநில விருந்தினர் மாளிகையில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அஜய் ஜாம்வால் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது என்று கூறினார். அதற்கு நேபாளமும் இலங்கையும் எஞ்சியுள்ளதாக அமித்ஷா பதிலளித்தார். நாம் அங்கேயும் வெல்ல வேண்டும்” என்று பிப்லவ் தேவ் கூறினார். கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களைப் பற்றி குறிப்பிடுகையில், இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தேவ் கூறினார்.
“கேரளாவில் இனி சிபிஎம் அல்லது காங்கிரஸ் கட்சிகள் இருக்காது. நரேந்திர மோடி அங்கு செல்கிறார். அமித் ஷா ஏற்கனவே அங்கு சென்றுவிட்டார். தமிழ்நாட்டிலும் அடுத்து ஆட்சி அமைப்போம். பாஜகவைத் தவிர வேறு எந்த அரசும் இருக்காது” என்று பிப்லவ் தேவ் கூறினார்.
பிப்லவ் தேவ் தனது கருத்துக்கள் நகைச்சுவையாக கூறியிருந்தாலும் கட்சியின் நீண்டகால கருத்தியல் அபிலாஷைகள் குறித்து தான் அவர் உண்மையை பேசியதாக திரிபுரா பாஜக கூறுகிறார்கள்.
“நம்முடைய இந்திய தத்துவத்தையும் கலாச்சாரத்தையும் பல்வேறு நாடுகளுக்கு நீண்ட காலமாக விரிவுபடுத்துவதற்கான பணிகளை நாம் தொடங்கினோம். நாங்கள் தேர்தல் போட்டியை முதன்மை நோக்கமாக ஒருபோதும் கருதுவதில்லை. எல்லா இடங்களிலும் உள்ள மக்களையும் நாங்கள் வெற்றி பெற பரிசீலித்து வருகிறோம்.” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நபேந்து பட்டாச்சார்யா கூறினார்.
காங்கிரஸ் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உரிமை கோருவது நேபாளி காங்கிரஸ் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போலவே உலகளாவிய இருப்பைக் கொண்டுள்ளது, பிஜேபியின் சித்தாந்தத்தை ஏன் உலகளவில் பரப்ப முடியாது என்று பட்டாச்சார்யா கேள்வி எழுப்பினார்.
மேலும், “இந்திய கலாச்சாரம், தத்துவம் சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோம், அதை மற்ற நாடுகளுக்கும் பரப்ப விரும்புகிறோம். அரசியல் அபிலாஷைகளுக்காக மட்டும் நாங்கள் பணியாற்றுவதில்லை. பிப்லாப் டெப் அதையே சொன்னார். அதில் என்ன தவறு? ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நேபாளம் மற்றும் இலங்கை இரண்டும் இறையாண்மை கொண்ட நாடுகள் என்பதால் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில துணைத் தலைவருமான தபஸ் தே கூறினார். பிப்லவ் தேவ்வுடைய கருத்து குறித்து சிபிஎம் தலைவர்கள் யாரும் கருத்து கூறவில்லை.
இலங்கை மற்றும் நேபாளத்தில் பாஜக ஆட்சியை விரிவுபடுத்தும் திட்டம் குறித்து அமித்ஷா நகைச்சுவையாக பேசியதாக திரிபுரா முதல்வர் பிப்லவ் தேவ் நகைச்சுவையாகக் கூறியிருப்பது அரசியலில் பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.