scorecardresearch
Live

Assembly Election Result 2023 Live Updates: திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியை தக்க வைக்கும் பா.ஜ.க கூட்டணி; மேகாலயாவில் பெரும்பான்மை கிடைக்காத என்.பி.பி

Tripura, Meghalaya, Nagaland Election Result 2023 Live Updates: திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

Assembly Election Result 2023 Live Updates: திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியை தக்க வைக்கும் பா.ஜ.க கூட்டணி; மேகாலயாவில் பெரும்பான்மை கிடைக்காத என்.பி.பி

Election Result 2023 Live: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் சட்டப்பேரவைக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அங்கு தேர்தல் நடைபெற்றது. மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. . திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்தில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பா.ஜ.க திரிபுராவில் ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் பா.ஜ.க அதன் கூட்டணி கட்சியான தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி (NDPP) உடன் ஆட்சி அமைக்கும் என்றும் மேகாலயாவில் இழுபறி நீடிக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகிறது. முன்பு வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ், தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Live Updates
19:53 (IST) 2 Mar 2023
வடகிழக்குக்கு வரலாற்று நாள், அமைதிக்கான மக்களின் விருப்பம் பா.ஜ.க; தேர்தல் முடிவுகள் நிரூபணம் – அமித்ஷா

வடகிழக்கு மாநிலங்களுக்கு இது ஒரு 'வரலாற்று நாள்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். அமைதி, வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க மக்களின் விருப்பம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்று கூறினார்.

18:36 (IST) 2 Mar 2023
பாஜகவை ஆதரித்த மாநில மக்களுக்கு நன்றி : பிரதமர் மோடி ட்விட்

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இரு மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேகாலயாவில் தொங்கு சட்டசபை உருவாக உள்ள நிலையில், அங்கு பாஜகவை ஆதரித்த மாநில மக்களுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

ட்விட்டரில், என்டிபிபி-பாஜக கூட்டணியின் வெற்றிக்கு நாகாலாந்து மக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி, இரட்டை எஞ்சின் அரசாங்கம் அதன் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைக்கும் என்று கூறினார்.

17:40 (IST) 2 Mar 2023
திரிபுராவில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை; திப்ரா மோதா-வின் குறையும் கிங்மேக்கர் நம்பிக்கை

திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, திப்ராஹா பழங்குடியின முற்போக்கு பிராந்தியக் கூட்டணி (திப்ரா மோதா) 11 இடங்களில் முன்னிலை வகித்து, பா.ஜ.க-ஐ.பி.எஃப்.டி-யின் ஆளும் கூட்டணியை பின்னுக்குத் தள்ளியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த இடங்களை பா.ஜ.க கூட்டணி வைத்திருந்தது.

திரிபுராவில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், திப்ரா மோதா-வின் கிங்மேக்கராகும் நம்பிக்கை குறைந்துள்ளது.

16:42 (IST) 2 Mar 2023
வடகிழக்கில் காங்கிரஸ் ஏமாற்றம்; மே.வ., தமிழ்நாடு இடைத்தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல்களில் காங்கிரஸின் செயல்திறன் அதன் எதிர்பார்ப்புகளை விட மிகக் குறைவாக இருந்தது, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் மட்டுமே அக்கட்சிக்கு சிறிது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

16:35 (IST) 2 Mar 2023
நாகாலாந்தின் முதல் பெண் எம்.எல்.ஏ: சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி

தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (NDPP) ஹெகானி ஜகாலு நாகாலாந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.எல்.ஏ ஆனார்.

நாகலாந்து மாநிலத்தில் இதுவரை 13 மாநில சட்டசபைகள் அமைந்திருந்தாலும், இதுவரை ஒரு பெண்கூட எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. வியாழக்கிழமை மதியம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆறாவது நபர் ஜகாலு ஆவார்.

அவர் தொகுதியில் 31,874 வாக்குகளில் 45.16 சதவீதத்தைப் பெற்றார், லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் பாஸ்வான்) அசெட்டோ ஜிமோமியை விட அவர் 40.34 சதவீத வாக்குகளைப் பெற்றார். போட்டி முடிவடையும் வரை கடுமையான போட்டி இருந்தது.

16:23 (IST) 2 Mar 2023
நாகலாந்து தேர்தல்: 60 ஆண்டுகளில் முதன்முறையாக பெண் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி

பா.ஜ.க கூட்டணிக் கட்சியான என்.டி.பி.பி-யின் இரண்டாவது பெண் வேட்பாளர் சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் மேற்கு அங்கமி தொகுதியில் வெறும் 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 14வது நாகாலாந்து சட்டப் பேரவையில் அவர் ஹெகானி ஜகாலுவுடன் எம்.எல்.ஏ.வாக இணைகிறார். இது மாநிலத்தின் முதல் பெண் எம்.எல்.ஏக்களைக் கொண்ட சட்டமன்றமாக அமைகிறது. சிறிது நேரத்திர்கு முன்பு, என்.டி.பி.பி-யைச் சேர்ந்த ஜகாலு, திமாபூர்-III தொகுதியில் வெற்றி பெற்று, நாகாலாந்து மாநில அந்தஸ்து பெற்ற 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பெண் எம்.எல்.ஏ ஆனார்.

15:44 (IST) 2 Mar 2023
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, தெற்கு துராவில் வெற்றி உறுதி

தற்போதைய மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, தெற்கு துரா தொகுதியை கிட்டத்தட்ட 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தக்கவைக்க உள்ளார். பா.ஜ.க-வின் பெர்னார்ட் மரக் 7260 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்த முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்மா, “எங்கள் கட்சிக்கு வாக்களித்த மாநில மக்களுக்கு நன்றி. எங்களிடம் சில எண்ணிக்கை குறைவாக உள்ளது, எனவே இறுதி முடிவுகள் வரும் வரை காத்திருந்து எப்படி முன்னேறி செல்வது என்று முடிவு செய்வோம்” என்று கூறினார்.

15:37 (IST) 2 Mar 2023
திரிபுரா தேர்தல் 2023: பா.ஜ.க 15 இடங்களில் வெற்றி; 18 இடங்களில் முன்னிலை

திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 18 இடங்களில் பா.ஜ.க 15 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளதால் அகர்தலாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. முதல்வர் மாணிக் சாஹா, முன்னாள் முதல்வரும், கட்சியின் எம்.பி.யுமான பிப்லாப் தேப், கட்சியின் தலைவர் சம்பித் பத்ரா ஆகியோரும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

முதல்வர் டாக்டர். மாணிக் சாஹா, பா.ஜ.க-வை இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுத்ததற்காக வாக்காளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, திரிபுராவின் வளர்ச்சிக்காக கட்சி உழைக்கும் என்றும், ‘ஏக் திரிபுரா, ஸ்ரேஸ்தா திரிபுரா’ அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

“பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பிற மூத்த தலைவர்கள் இங்கு மத்திய நலத்திட்டங்கள், கிழக்குக் கொள்கைகள் குறித்து பிரச்சாரம் செய்து, நமது வளர்ச்சி முயற்சிகளை மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர். எல்லாமே எங்களுக்கு சாதகமாகவே சென்றது. எனது ஒரே பிரச்சினை வளர்ச்சி மற்றும் அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். இந்த முறை பிப்ரவரி 16-ம் தேதி தேர்தல் அமைதியாக நடந்துள்ளது. அனைத்து கட்சித் தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சித் தரப்பினருக்கும் எனது வேண்டுகோள், அமைதியைக் காத்து, எங்கும் வன்முறை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே' என்றார் டாக்டர் மாணிக் சாஹா.

14:54 (IST) 2 Mar 2023
கஸ்பா பெத் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் வெற்றியின் கொண்டாட்டம்

கஸ்பா பெத் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர், வாக்கு எண்ணும் இடத்திற்கு வெளியே ஆதரவாளர்களுடன் கொண்டாடுகிறார்.

14:51 (IST) 2 Mar 2023
ராம்கர் இடைத்தேர்தல்: AJSU கட்சியின் சுனிதா சவுத்ரி 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

AJSU கட்சியின் சுனிதா சவுத்ரி, ஜார்கண்டில் உள்ள ராம்கர் சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியாளரான பஜ்ரந்த் மஹ்தோவை விட 19,529 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

13:43 (IST) 2 Mar 2023
நாகாலாந்து: தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி- பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 34 இடங்களில் முன்னிலை (5 இடங்களில் வெற்றி)

13:41 (IST) 2 Mar 2023
திரிபுரா: பாரதிய ஜனதா கட்சி 29 இடங்களில் முன்னிலை (3 இடங்களில் வெற்றி)

13:40 (IST) 2 Mar 2023
மேகாலயா: தேசிய மக்கள் கட்சி 22 இல் முன்னிலை (4 இடங்களில் வெற்றி)

12:59 (IST) 2 Mar 2023
சின்ச்வாட் இடைத்தேர்தல் அப்டேட்: 17வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை

17வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜகவின் அஷ்வினி ஜக்தாப் 61,473 வாக்குகளும், என்சிபியின் நானா கேட் 50,622 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் ராகுல் கலாட் 19,405 வாக்குகளும் பெற்றனர்.

12:45 (IST) 2 Mar 2023
நாகாலாந்தின் முதல் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிப்பு

இதில் துன்சாங் சதார்-1 தொகுதியில் பாஜக வேட்பாளர் பி. பஷாங்மோங்பா சாங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதியில் 19,148 வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, சாங் 63.3% வாக்குகளைப் பெற்றார். என்சிபியின் டோயாங் சாங் 35.03% வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

12:28 (IST) 2 Mar 2023
மகாராஷ்டிரா இடைத்தேர்தல்: பாஜக ஆட்சி செய்த கஸ்பா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது

கஸ்பா பெத் சட்டமன்றத் தொகுதியில் 20வது சுற்று வாக்கு எண்ணிக்கை படி, காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் 72,599 வாக்குகள் பெற்று வெற்றியடைகிறார். பாஜகவின் ஹேமந்த் ரசானே 61,771 வாக்குகள் பெற்றுள்ளார்.

12:16 (IST) 2 Mar 2023
திரிபுராவில் காங்கிரஸ் மறுமலர்ச்சி: 5 இடங்களில் முன்னிலை

திரிபுராவில் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி தற்போது 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கடந்த முறை எந்த இடத்திலும் வெற்றி பெறாத நிலையில், காங்கிரஸ் தற்போது ஐந்து இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

11:01 (IST) 2 Mar 2023
கான்ராட் Vs பெர்னார்ட்: தெற்கு துராவில் கடும் போட்டி, பரபரப்பு

தெற்கு துராவில் தற்போதைய முதல்வர் கான்ராட் சங்மா, பாஜகவின் பெர்னார்ட் மராக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரண்டாம் சுற்று முடிவில் சங்மா 44 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். முதலமைச்சரின் தொகுதியான தெற்கு துரா இந்தத் தேர்தலில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

09:42 (IST) 2 Mar 2023
திரிபுரா பா.ஜ.க முன்னிலை; காங்கிரஸ் கூட்டணி பின்னடைவு

திரிபுராவில் இடதுசாரி+காங்கிரஸ் கூட்டணி பின்தங்கிய நிலையில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

நியூஸ் 18: பாஜக+ 26 – ல் முன்னிலை, இடது+22- ல் முன்னிலை, டி.எம்.பி 11- ல்

என்டிடிவி: பாஜக+ 39- ல் முன்னிலை, காங்கிரஸ்+இடதுசாரிகள் 15, திப்ரா 6- ல் முன்னிலை

இந்தியா டுடே: பாஜக+ 42- ல் முன்னிலை, இடது+;10 – ல் முன்னிலை, 8- ல் TMP முன்னிலை

09:06 (IST) 2 Mar 2023
திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை

திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க கூட்டணி 40+ இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேகலாயாவில் ஆளும் கட்சி என்.பி.பி முன்னிலை வகிக்கிறது.

Web Title: Tripura meghalaya nagaland elections results

Best of Express