ஹரியானாவின் பிஜேபி-ஜேஜேபி (ஜனநாயக் ஜனதா கட்சி) கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12,2024) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில், ஜேஜேபி தலைவரும் துணை முதலமைச்சருமான துஷ்யந்த் சவுதாலாவின் கட்சியில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் வரை வெளியேற வாய்ப்புள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இவர்களில் நார்னவுண்ட் எம்எல்ஏ ராம் குமார் கவுதம், பர்வாலா எம்எல்ஏ ஜோகி ராம் சிஹாக், குஹ்லா எம்எல்ஏ ஈஸ்வர் சிங் மற்றும் ஜூலானா எம்எல்ஏ அமர்ஜித் தண்டா ஆகியோர் அடங்குவர். துஷ்யந்தின் நம்பிக்கைக்குரிய தேவேந்திர சிங் பாப்லி, பஞ்சாயத்து அமைச்சராக கடந்த ஆண்டு அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு, துஷ்யந்தை சிறிது காலமாக விமர்சித்து வந்தார்.
இதற்கிடையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை அடுத்து கட்சியின் எதிர்கால வியூகம் குறித்து விவாதிக்க துஷ்யந்த் அனைத்து 10 எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களின் கூட்டத்தை டெல்லியில் கூட்டினார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள கவுதம், சிஹாக், சிங், தண்டா மற்றும் பாப்லி இன்னும் செல்லவில்லை. துஷ்யந்த் தவிர, அவரது தாயும் பத்ரா எம்எல்ஏவுமான நைனா சவுதாலா, உக்லானா எம்எல்ஏ அனூப் தனக், நர்வானா எம்எல்ஏ ராம் நிவாஸ் மற்றும் ஷஹபாத் எம்எல்ஏ ராம் கரண் ஆகியோர் மட்டும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சண்டிகருக்கு வந்து பா.ஜ.க.வின் உயர்மட்டத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஹரியானா விதான் சபாவில் ஹரியானா லோகித் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ கோபால் கண்டா கூறுகையில், “ஹரியானாவில் பாஜக-ஜே.ஜே.பி கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக நான் நம்புகிறேன். ஹரியானாவில் 10 மக்களவைத் தேர்தல்களிலும் பாஜக தனித்து போட்டியிட வேண்டும்.
பாஜகவுக்கு ஜேஜேபியின் ஆதரவு தேவையில்லை என்று நான் நீண்ட நாட்களாக கூறி வந்தேன். இன்று சண்டிகருக்கு வந்து பா.ஜ.க.வின் உயர்மட்டத் தலைமையைச் சந்திக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறேன். நான் இங்கு வந்துவிட்டேன். காலை 11.30 மணிக்கு தொடங்கும் பாஜகவின் உட்கட்சி கூட்டத்திற்கு பிறகு கூட்டம் நடைபெறும்” என்றார்.
முன்னதாக, பல ஜேஜேபி எம்எல்ஏக்கள் ஹரியானா விதான் சபாவிற்கு உள்ளேயும் வெளியேயும் துஷ்யந்த் சவுதாலாவை கடுமையாக விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Troubles mount for Dushyant Chautala as JJP MLAs stay away from Delhi meeting
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“