ஒரு ஆண், ஒரு பெண்ணை அடித்து, கீழே தள்ளும் ஒரு அதிர வைக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் ஆண் தற்போது தெலுங்கானாவின் ஆளும்கட்சியான தெலுங்கான ரஷ்த்ரா சமிதி (TRS) கட்சியின் இளைஞர் தலைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அவர் அடித்து கொடுமை படுத்தும் பெண் அவரது மனைவி சங்கீதா ரெட்டி.
Advertisment
அந்த வீடியோவில் 30 வயதான ஸ்ரீனிவாஸ் தனது மனைவியை முடியை பிடித்து இழுத்து, அவரை அடித்து கீழே தள்ளுகிறார். இந்த சம்பவத்தை சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்கின்றனர் ஆனால் எவரும் உதவ முன் வரவில்லை என்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஸ்ரீனிவாஸ் மட்டும் அல்லாமல் மற்றொரு பெண்ணும் சங்கீதாவின் முடியை பிடித்து இழுத்து கதவில் மோதும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
சங்கீதாவின் அனுமதியின்றி ஸ்ரீனிவாசிற்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இரண்டாவது திருமணத்தை சங்கீதா எதிர்க்கவே, ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது கட்சியினர் ஆத்திரம் அடைந்து அவரை தாக்குவதாக தெரிய வந்துள்ளது. மேலும் அந்த வீடியோவில் முதல் மற்றும் இரண்டாவது மனைவி வாக்குவாதத்தில் ஈடுப்படுவதை காணலாம்.
Advertisment
Advertisements
இந்த சம்பவத்தை சங்கீதாவின் சகோதரர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் வீடியோ எடுத்துள்ளனர். அவர்களையும் ஸ்ரீனிவாஸ் தாக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து சங்கீதா காவல் துறையில் கட்சியாளர்களுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரை ஏற்று காவல் துறையினர் ஸ்ரீனிவாசனை கைது செய்துள்ளனர்.
ஸ்ரீனிவாசனிற்கு ஏற்கனவே சங்கீதா உடன் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தெரியாமல் தேவி ஜெகதீஸ்வரி என்னும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இது சங்கீதாவிற்கு தெரியவர வீடியோவில் காணும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனை தொடர்ந்து ஊடகத்திற்கு பேட்டி அளித்த சங்கீதா,”கடந்த சில மாதங்களாகவே என் மாமியார் வீட்டில் வரதட்சணை கேட்டு என்னை கொடுமை படுத்தினர். என் கணவரும் என்னை முறையாக நடத்தவில்லை. வேலை ஆட்களை விட மோசமாக நடத்தினார். எனக்கு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து அதிகமாக துன்புறுத்தினர். இது என் குழந்தை இல்லை என கொடுமைப்படுத்தினார். இப்பொழுது எனக்கு தெரியாமல் மறுமணம் செய்துக்கொண்டார். நியாயம் தேடி என் பெற்றோர்களுடன் இங்கு வந்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.
சங்கீதாவை ஸ்ரீனிவாஸ் 2011ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் செய்த கொடுமை தாங்காமல் ஜூன் மாதம் காவல் துறையில் புகார் செய்துள்ளார். அதன் பிறகே ஆகஸ்ட் மாதம் ஸ்ரீனிவாஸ் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.