Advertisment

திராவிடக் கட்சிகள் இத்தனை ஆண்டுகள் அதிகாரம் செலுத்துவது எப்படி? ஆய்வு செய்ய வரும் டி.ஆர்.எஸ்

தெலங்கானாவில் கே.டி.ஆர் என பிரபலமாக அறியப்படும் ராமா ராவ், சமீபத்தில் திமுகவின் இரண்டு எம்.பி.க்கள் ஹைதராபாத்தில் அவரைச் சந்தித்தபோது, ​​அவர் அவர்களுடைய கட்சியின் கட்டமைப்பு குறித்து அவர்களுடன் ஒரு தொடக்கநிலை விவாதத்தை நடத்தினார்.

author-image
WebDesk
New Update
TRS leaders, kt rama rao, trs leaders will visit Tamil Nadu, trs leaders study strong organisational structure of DMK and AIADMK, dmk, aiadmk, திமுக, அதிமுக, திமுக கட்சி கட்டமைப்பை தெரிந்துகொள்ள வரும் டிஆர்எஸ் தலைவர்கள், கேடி ராமாராவ், Telangana, TRS party, chandrasekara rao

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் தலைமையிலான அக்கட்சியின் பிரதிநிதிகள், தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் வலுவான கட்சி கட்டமைப்பை ஆய்வு செய்து தெரிந்துகொள்ள நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு தமிழகம் வருகிறார்கள்.

Advertisment

தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வலுவான கட்டமைப்புகளை ஆய்வு செய்து தெரிந்துகொள்ள டி.ஆர்.எஸ் கட்சி தலைவர் கே.டி.ராமா ராவ் நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு வர உள்ளதாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கட்சிகள்ம் 50 ஆண்டுகளைத் தாண்டி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. டிஆர்எஸ் அக்கட்சிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்து தெரிந்துகொள்ள முடிவு செய்துள்ளது என்று ராமா ராவ் கூறினார்.

தெலங்கானாவில் சமீபத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த டிஆர்எஸ் கட்சி தமிழகத்தில் இரு கட்சிகளையும் முன்மாத்ரியாக ஆய்வு செய்து தெரிந்துகொள்ளவும் அதன்பிறகு அமைப்பை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், மாநிலக் கட்சிகள் இருபதாண்டுகளாக தொடர்ந்து செயல்படுவது என்பது ஒரு பெரிய விஷயம் என்று ராமாராவ் கூறினார்.

பிரிக்கப்படாத ஆந்திராவில் 2 அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்ததை சுட்டிக்காட்டிய ராமா ராவ், 1982ல் தெலுங்கு தேசம் கட்சி என்.டி.ராமா ராவால் தொடங்கப்பட்டது. 2001ல் டி.ஆர்.எஸ் கட்சி சந்திரசேகர் ராவ்ஆல் தொடங்கப்பட்டது. அங்கே 2 கட்சிகள் மட்டுமே இருந்தன.

தெலங்கானாவில் கே.டி.ஆர் என பிரபலமாக அறியப்படும் ராமா ராவ், சமீபத்தில் திமுகவின் இரண்டு எம்.பி.க்கள் ஹைதராபாத்தில் அவரைச் சந்தித்தபோது, ​​அவர் அவர்களுடைய கட்சியின் கட்டமைப்பு குறித்து அவர்களுடன் ஒரு தொடக்கநிலை விவாதத்தை நடத்தினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்க திமுக எம்.பி.க்கள் கே.டி.ஆரை சந்தித்தனர். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளிக்க ஸ்டாலின் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவுக்கு அழைப்பு விடுத்தார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் ஸ்டாலினுடன் 100 சதவீதம் உடன்பட மாட்டார்கள் என்று சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ஆர் கூறினார்.

தெலங்கானாவைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மாநில மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும், கே.சி.ஆரின் தேசிய அரசியல் நுழைவு பொருத்தமான நேரத்தில் நடக்கும் என்று கூறினார்.

சந்திரசேகர ராவ் பல தலைவர்களை உருவாக்கினார் என்று அவர் கூறிய கே.டி.ஆர் அவர் சந்திரசேகர ராவை ‘தொலைநோக்கு பார்வை கொண்டவர்’ என்று விவரித்தார். மற்ற கட்சிகளின் தலைவர்கள் ‘தொலைநோக்கு பார்வையாளர்கள்’ என்று குறிப்பிட்டார்.

பல்வேறு தொகுதிகளில் கட்சிக்குள் உள்ள குழு பூசல், குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.டி.ஆர், அது 'கட்சியின் பலத்தை' பிரதிபலிக்கிறது என்றும் கட்சி அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொகுதி அளவிலான தலைவர்களுடனான சந்திப்பின் போது கிடைத்த கருத்துகளை சந்திரசேகர ராவிடம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

கட்சித் தலைவர் தேர்தலுக்காக சந்திரசேகர ராவ் சார்பில் இதுவரை 10 செட் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பதை அவர் வெளிப்படுத்தினார். அக்டோபர் 25ம் தேதி நடைபெறும் டி.ஆர்.எஸ் கட்சியின் முழுத் தலைவராகவும் டி.ஆர்.எஸ்ஸின் அடுத்த தலைவரை சுமார் 6,500 உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

டி.ஆர்.எஸ் கட்சி 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடும் விதமாகவும், கடந்த 7 ஆண்டுகளில் தெலங்கானாவின் முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தவும் நவம்பர் 15ம் தேதி வாரங்கலில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.எஸ் தலைவர் கே.டி.ஆர் கூறினார்.

நவம்பர் 15 கூட்டத்திற்குப் பிறகு, டி.ஆர்.எஸ் கட்சி அமைச்சர்கள் முதல் வார்டு அளவிலான நிர்வாகிகள் வரை பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்யும் என்றார். இந்த பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் ஒன்பது மாதங்கள் தொடரும் என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment