டிரம்ப் வெற்றி எதிரொலி: H1B விசா, அதிகாரப்பூர்வ குடியேற்றம் குறித்து கூகுளில் தேடிய இந்தியர்கள்

அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், இந்தியர்கள் பெரும்பாலும் சட்டப்பூர்வமான குடியேற்றம், H1B விசா உள்ளிட்டவற்றை கூகுளில் தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், இந்தியர்கள் பெரும்பாலும் சட்டப்பூர்வமான குடியேற்றம், H1B விசா உள்ளிட்டவற்றை கூகுளில் தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trmp

அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அமெரிக்காவில் குடியேறுவதற்காக நடைமுறைகளில் சிக்கல் உருவாகுமா என இந்தியர்கள் கவலையடைந்துள்ளனர். அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பாக பல இடங்களில் தனது கருத்துகளை டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: After Trump’s win, India Googles immigration and H1B, Americans on ways to leave the US

நவம்பர் 6-ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், கூகுளில் அதிகப்படியாக ‘சட்டப்பூர்வ குடியேற்றம்,’ ‘H1B விசா’ மற்றும் ‘அமெரிக்காவின் பிறப்பு குடியுரிமை’ போன்றவற்றை இந்தியர்கள் தேடியதாக தரவுகள் கூறுகின்றன.

மற்றொரு புறம் அமெரிக்காவின் வெர்மான்ட் மற்றும் மினசோட்டா போன்ற மாகாணங்களில், கனடாவுக்கு செல்வதற்கான வழிகளை தேடியுள்ளனர். 

H1B விசா மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றம்

Advertisment
Advertisements

ட்ரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நவம்பர் 6-ம் தேதி இந்தியாவில், 'சட்டப்பூர்வ குடியேற்றம்' பற்றிய தேடல் அதிகரித்தது. டிரம்ப் வெற்றிபெற்றால் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்திருந்தாலும், சுமார் 1 மாதத்திற்கு இது குறித்த தேடல்கள் இல்லை. ஆனால், டிரம்பின் வெற்றிக்கு பின்னர், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அதிகப்படியான, சட்டப்பூர்வமான குடியேற்றம் குறித்து தேடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தெலங்கானா, ஆந்திரா, ஹரியானா மற்றும் கேரளாவிலும் இந்த தேடல் அதிகரித்தது.

குறிப்பாக, ‘டிரம்ப் சட்டப்பூர்வ குடியேற்றம்‘, டிரம்பின்கீழ் சட்டப்பூர்வ குடியேற்றம்‘ மற்றும் ‘ஸ்டீஃபன் மில்லர்‘ போன்ற சொற்களை அதிகம் தேடியுள்ளனர். டிரம்ப் தனது நீண்டகால உதவியாளரான மில்லரை, துணை தலைமை அதிகாரியாக நியமித்தது குறிப்பிடத்தக்கது. இவரும் குடியேற்றத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பல கொள்கை முடிவுகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். குடியேற்றம் தொடர்பான சட்டதிட்டங்களில் இவரின் பங்கு பெரியது. இவர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதால், இந்தியர்களுக்கான H1B விசாவுக்கான நிராகரிப்புகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

H1B விசாவுக்கான கூகுள் தேடல் வினவல்களும் நவம்பர் 6 அன்று அதிகரித்தன.  ‘டொனால்ட் டிரம்ப் H1B விசா,’ மற்றும் ‘அமெரிக்க குடியுரிமை’ போன்ற சொற்றொடர்களும் அதிகமாக தேடப்பட்டது. H1B விசா என்ற சொற்றொடர் தெலங்கானாவில் வசிக்கும் மக்களால் அதிகம் தேடப்பட்டது, அதைத் தொடர்ந்து சண்டிகர், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் இது குறித்து தேடியுள்ளனர்.

மற்றொருபுறம், அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு எப்படி குடிபெயர்வது என, அந்நாட்டில் அதிகப்படியான மக்கள் கூகுளில் தேடியுள்ளனர். இது அமெரிக்காவை விட்டு அவர்கள் வெளியேற விரும்புவதை காண்பித்துள்ளது.

நவம்பர் 6-ஆம் தேதி முதல் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு செல்வது எப்படி என தேடல் அதிகரித்துள்ளது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இது போன்ற தேடல்கள் எதுவும் இருக்கவில்லை. இந்த வினவல்கள் முக்கியமாக மைனே, வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், ஓரிகான் மற்றும் மினசோட்டா பகுதிகளில் அதிகரித்துக் காணப்பட்டது. இப்பகுதிகளில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட, கமலா ஹார்ஸ் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தார்.

'அமெரிக்காவில் இருந்து அயர்லாந்திற்குச் செல்வது எப்படி?', 'அமெரிக்காவில் இருந்து நியூசிலாந்திற்குச் செல்வது எப்படி?' எனவும் அதிகளவிலான மக்கள் தேடியுள்ளனர்.

இந்நிலையில், கருக்கலைப்பு மற்றும் குடும்பக்கட்டுப்பாடு போன்ற செய்திகளையும் அமெரிக்காவில் பெண்கள் தேடியுள்ளனர்.

2022 இல், அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரோ.வி.வேட் தீர்ப்பை அதிகாரப்பூர்வமாக மாற்றியது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நிலைநிறுத்தப்பட்ட கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமை இனி இல்லை என்று அறிவித்தது. பல மாகாணங்களில் இவை நடைமுறைப்படுத்தப்பட்டன.

டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற மாகாணங்களில், குடும்பக் கட்டுப்பாடு குறித்த தேடுதல்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

H1b Visa Donald Trump

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: