திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சீர்திருத்தங்களை மேற்கொள்வது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்றும் அவை மாறிவரும் காலம் மற்றும் பக்தர்களின் தேவைகளுக்கு ஏற்ப உருவாகி வருகின்றன என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலர் சியாமளா ராவ் கூறுகிறார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக ஜே. சியாமளா ராவ் உள்ளாதிருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் டி.டி.டி நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ் ஒரு ஊழியருக்கு தகுதிச் சான்றிதழை வழங்கினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ், திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு இடையூறு இன்றி தரிசனம் வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
நாட்டின் 78-வது சுதந்திர தின விழா திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டத்ஹு. டி.டி.டி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய ஜே. சியாமளா ராவ், ஒவ்வொரு இந்துவின் திருப்பதி யாத்திரையை மறக்கமுடியாத ஒன்றாக மாற்ற ஊழியர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
‘தேசபக்தியும் பக்தியும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன’ என்று வலியுறுத்திய ஜே. சியாமளா ராவ், பக்தர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் உறுதியாக இருக்க நமது தேசியத் தலைவர்கள் வகுத்த பாதையில் இருந்து உத்வேகம் பெற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார்.
“யாத்ரீகர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது திருமலை திருப்பதியில் ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஏனெனில் உத்திகள் மாறிவரும் காலம் மற்றும் பக்தர்களின் தேவைகளுக்கு ஏற்ப உருவாகி வருகின்றன” என்று ஜே. சியாமளா ராவ் கூறினார்.
மேலும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய நிர்மானம் அறக்கட்டளையின் (ஸ்ரீவானி) சேவா ஆன்லைன் ஒதுக்கீட்டை 1,000 டிக்கெட்டுகளாகக் கட்டுப்படுத்துவதையும், சாதாரண யாத்ரீகர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஸ்லாட் சர்வ தர்ஷன் டோக்கன்களை மேம்படுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய டி.டி.டி நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ், “லட்டு பிரசாதம் மற்றும் அன்னதானத்தின் தரம் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் டி.டி.டி வரிசைகள் மற்றும் பெட்டிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் பால் விநியோகத்தை புதுப்பித்துள்ளது என்றும் வலியுறுத்தினார்.
“திருமலை சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், பசுமையாகவும் பராமரிக்க, சுகாதார நடவடிக்கைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன, திருமலையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், வருகை தரும் பக்தர்களுக்கு தரமான மற்றும் மலிவு விலையில் உணவு வகைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும் மற்றும் இறுதி இலக்கு திருமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வசதியான தங்குதல், தொந்தரவு இல்லாத தரிசனம் மற்றும் மறக்கமுடியாத யாத்திரை அனுபவத்தை வழங்குவதாகும்” என்று டி.டி.டி நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ் கூறினார்.
பின்னர், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ், “டி.டி.டி-யின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் சிறந்த பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இணை செயல் அலுவலர்கள் எம். கௌதமி, வி. வீரபிரம்மம், தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி எஸ்.ஸ்ரீதர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (எஸ்.வி.பி.சி) தலைமை செயல் அதிகாரி சண்முக்குமார் உள்ளிட்டோர் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.