Advertisment

ஜப்பானின் டெமிங் விருதைப் பெறும் முதல் இந்தியர்... பெருமை சேர்த்த வேணு ஸ்ரீநிவாசன்

1989ம் ஆண்டு முதல் டிவிஎஸ் நிறுவனத்தின் சிறப்பான மேலாண்மைக்கு வித்திட்ட அனைவருக்கும் இந்த விருது சமர்ப்பணம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TVS chief Venu Srinivasan wins Deming Distinguished Service Award

TVS chief Venu Srinivasan wins Deming Distinguished Service Award

TVS chief Venu Srinivasan wins Deming Distinguished Service Award :  டி.வி.எஸ் மோட்டர் கம்பெனி மற்றும் சுந்தரம் - க்ளெய்டொன் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசனுக்கு ஜப்பானின் டெமிங் விருது வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு வெளியே தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் தரமான மேலாண்மையை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்படும்.

Advertisment

இந்த விருது டெமிங் ப்ரைஸ் கமிட்டி மற்றும் ஜப்பான் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கான சங்கம் (Japanese Union of Scientists and Engineers (JUSE)) இணைந்து ஜப்பானியர் அல்லாதோருக்கு வழங்குவது வழக்கம் ஆகும்.

டெமிங் விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற பெறுமையை தக்க வைத்துக் கொண்டார் ஸ்ரீநிவாசன். இது குறித்து அவர் பேசும் போது டெமிங் கமிட்டி மற்றும் ஜெ.யூ.எஸ்.இ. அமைப்பிற்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் அவர்.

1989ம் ஆண்டு முதல் டி.வி.எஸ் மோட்டர்ஸ் மற்றும் சுந்தரம் க்ளேடோன் நிறுவனத்தின் தர மேலாண்மையை திறமையாக நிர்வகிக்க உதவிய என்னுடைய நிர்வாகிகள், உடன் பணிபுரிந்தோரின் உழைப்பிற்கு கிடைத்த பரிசு இது என்று அவர் கூறினார்.

Japan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment