அரசை விமர்சிக்கும் சமூக ஆர்வலர்களின் ட்விட்டர் கணக்கை டார்கெட் செய்யும் திரிபுரா போலீஸ்

வீடியோக்களை பகிர்ந்த 68 ட்விட்டர் பயனர்களை கண்டறிந்த திரிபுரா காவல்துறை, அந்த கணக்குகளை முடக்கிட டிவிட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. அதில், தற்போது வரை 24 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 57 ட்வீட்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறுபான்மைச் சமூகம் மீது தாக்குதல் நடத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கறிஞர்கள் பாஜகவை விமர்சனம் செய்தவர்களுக்கு எதிராக திரிபுரா காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுக்கு எதிராக உபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

திரிபுராவில் நடந்ததாகக் கூறப்படும் இஸ்லாமியர்களின் தொழுகை ஸ்தலமான மசூதி அவமதிப்பு சம்மந்தமான சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் ட்விட்டரில் பரவியதாக அந்த மாநில அரசு குற்றம்சாட்டியது.

இதற்கிடையில், வீடியோக்களை பகிர்ந்த 68 ட்விட்டர் பயனர்களை கண்டறிந்த திரிபுரா காவல்துறை, அந்த கணக்குகளை முடக்கிட டிவிட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. அதில், தற்போது வரை 24 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 57 ட்வீட்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திரிபுரா காவல் துறை கண்டறிந்த ட்விட்டர் கணக்குகளில் பெரும்பாலானவை புதியதாக ஆரம்பிக்கப்பட்டவை. அதில், 15 கணக்குகள் 2020-21 இல் தொடங்கப்பட்டதாகவும், 19 கணக்குகள் 2015 முதல் 2019ஆம் காலத்திற்கு இடையில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 7 கணக்குகள் 2010 -2014க்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான கணக்குகளில் பின்தொடருபவர்கள் எண்ணிக்கை குறைவாக தான் இருந்துள்ளது. 8 கணக்குகளுக்கு 10க்கும் குறைவான பாலோயர்ஸே உள்ளனர். 17 கணக்குகளில் 10க்கும் குறைவான பாலோயர்ஸூம், 21 கணக்குகளில் 1000க்கும் குறைவான பாலோயர்ஸூம் உள்ளனர். அதில், 12 கணக்குகளில் மட்டுமே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கணக்குகளில் பெரும்பாலானவை பாஜகவையும், அதன் தலைவர்களையும், அவர்கள் பின்பற்றும் சித்தாந்தத்தையை விமர்சித்தவை ஆகும். கண்டறியபட்ட கணக்குகளின் பயனர்கள் 9 பேர் தங்களை ஊடகவியலாளர்களாகவும், 7 பேர் அரசியல் வாதியாகவும், 5 பேர் மாணவர்களாகவும், 2 பேர் சமூக ஆர்வலர்களாகவும், 7 பேர் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ட்விட்டர் பயோவில் குறிப்பிட்டுள்ளனர். மற்ற கணக்குகளில் அவர்களின் அடையாளங்கள் குறிப்பிடவில்லை.

இவர்கள் அனைவரும், காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் மற்றும் பாரதிய இன்சான் கட்சி (பிஐபி) ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

இது தவிர, வடக்கு திரிபுராவில் உள்ள பனிசாகரில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிவைக்கப்பட்டதாகக் கூறி, ஜனநாயகத்திற்கான வழக்கறிஞர்கள் என்ற அமைப்பின் கீழ் உண்மை கண்டறியும் குழுவாக திரிபுரா வந்த நான்கு வழக்கறிஞர்கள் மீதும் நவம்பர் 3ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள், பல்வேறு மதச் சமூகங்களைச் சேர்ந்த மக்களைத் தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்கு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 3ஆம் தேதி, ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு காவல் துறை சார்பிஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், திரிபுராவில் பல்வேறு மத சமூகத்தினரிடையே வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டும் சாத்தியம் உள்ளதாகக் கூறப்படும் தகவல்களை கொண்ட 102 பயனர்களின் கணக்குகள் மற்றும் பக்கங்களைத் முடக்கமாறு கேட்டுக் கொண்டது. இந்த வகுப்புவாதம் கலவரமாக மாறக்கூடும். அவர்கள் மீது மேற்கு அகர்தலா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திரிபுரா காவல்துறை டிஜிபி வி எஸ் யாதவ் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இதுவரை 128 சமூக ஊடக பதிவுகளை அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 94 ட்விட்டர் பதிவுகள், 32 பேஸ்புக் பதிவுகள் மற்றும் 2 யூடியூப் பதிவுகள் ஆகும்.

அந்த பதிவுகளின் செய்தி நிறுவனங்களை போல் தவறான கருத்தை சித்தரித்து மக்களிடம் அவநம்பிக்கையை உருவாக்கி, வன்முறை உருவாக்கும் வகையில் பதிவுகள் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட பதிவுகளில் ஒன்று மட்டும் தாலிபானுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Twitter accounts of govt critics and activists targeted by tripura police

Next Story
இளம் பல்கலைக்கழக வேந்தர்… அம்பேத்கர் விருது பெற்று சாதனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com