ட்விட்டரில் இயங்கி வரும் போலிக் கணக்குகளை முடக்க உள்ளது ட்விட்டர் நிர்வாகம். தொடர்ந்து அதிகரித்து வரும் தவறான செய்திப் பரவல்களைத் தடுப்பதற்காக முயன்று வருகிறது ட்விட்டர் நிறுவனம். கடந்த சில மாதங்களில் ஒரு மில்லியன் கணக்குகள் ஒரு நாள் என்ற வீதத்தில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ட்விட்டரில் புகழ்பெற்று விளங்கும் பயனாளிகளின் ஃபோலோவர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டிருக்கிறது ட்விட்டர்.
ட்விட்டர் பாட்ஸ் (Twitter Bots)
ட்விட்டர் பாட்ஸ் என்பது ஒரு மென்பொருளாகும். இது ட்விட்டர் தளத்தில் முக்கியமான செய்தியினை தானாக ஜெனரேட் செய்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெரும் பட்சத்தில் அது அந்நாளின் ட்ரெண்டாக இருக்கும்.
பயனாளிகள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் போலி செய்திப் பரவல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி தொடர்ந்து முகநூல் மற்றும் ட்விட்டர் தள அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் மக்களின் கவனத்தைப் பெறுவதற்கும், போலியான செய்திகளை மக்கள் மனதில் உண்மை என்று நம்ப வைக்கவும் தவறான செய்திகளை பாட்ஸ் மென்பொருளே உருவாக்கி, அதனை மக்கள் மத்தியில் சேர்க்கின்றது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் பிரிக்ஸிட் ஆகியவற்றிலும் கூட இதன் பங்கு மிக முக்கியமானது.
போலிக் கணக்குகளை முடக்கும் ட்விட்டர்
இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்டும் விதமாக போலி கணக்குகள், ட்ரோல்கள், பாட்ஸ் ஆகியவற்றை தடுத்து நிறுத்துவதில் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் மட்டும் சுமார் 10 மில்லியன் போலிக் கணக்குகளை கண்டறிந்திருக்கிறது.
கடந்த பிப்ரவரியில் போலிக்கணக்குகள் முடக்கப்பட்ட பின்பு அமிதாப் பச்சனின் ஃபாலோவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதனையும் அவர் ஒரு ட்விட்டாக பதிவிட்டிருந்தார்.
ஒவ்வொரு பிரபலங்களை பின்தொடரும் போலி கணக்குகள்
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க பிரதமர் டொனால்ட் ட்ரெம்ப், மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர்களை ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் பின் தொடருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடியினை பின் தொடரும் 43 மில்லியன் கணக்குகளில் 10 மில்லியன் கணக்குகள் போலியானவை.
ராகுல் காந்தியினைப் பின் தொடரும் 7 மில்லியன் கணக்குகளில் 2 மில்லியன் கணக்குகள் போலியானவை. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்பினை ஃபாலோ செய்பவர்களில் 86% பேர் உண்மையான கணக்குகளைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/modi.jpg)
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜினை பின்பற்றும் கணக்குகளில் 21% போலிக்கணக்குகள். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தினை பின்தொடரும் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை முறையே 30% மற்றும் 21% ஆகும்.
விராத் கோலியினை பின்தொடரும் கணக்குகளில் பாதிக்கு பாதி போலியானவை. அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவினை பின்தொடரும் உண்மையான கணக்குகள் வெறும் 29% மட்டுமே.
Twitter Audit - Virat
தீபிகா படுகோனின் 25 மில்லியன் ஃபாலோவர்களில் 67% பேர் உண்மையானவர்கள் என்று ட்விட்டர் தகவல் அளித்துள்ளது.