scorecardresearch

உன்னாவ் வயல் பரப்பில் 2 தலித் சிறுமிகள் சடலமாக மீட்பு; உயிருக்கு போராடும் 17 வயது இளம்பெண்

அசோகா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மூன்று பெண்கள் சுயநினைவு அற்ற நிலையில் அவர்களின் சொந்த வயலில் மீட்கப்பட்டனர்.

Two Dalit girls found dead in a field in Unnao third critical

Asad Rehman

Two Dalit girls found dead in a field in Unnao, third critical  :  உன்னாவ் மாவட்டத்தில் உள்ள வயல் பரப்பில் இரண்டு பெண் குழந்தைகளின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை 13 வயது மற்றும் 16 வயது சிறுமிகள் வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்.

அவர்களுக்கு விஷம் தரப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். போராட்டங்களால் ஏற்பட்ட காயங்கள் ஏதும் அவர்களின் உடல்களில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 16 வயது மற்றும் 17 வயது சிறுமிகள் இருவரும் அக்கா தங்கைகள் மற்றும் 13 வயது சிறுமி அவர்களின் உறவினர். இந்த சிறுமிகளின் சகோதரர், அவர்கள் உடல்கள் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன என்று கூறியுள்ளார். 13 வயது மற்றும் 16 வயது சிறுமிகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது இறந்துவிட்டனர் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 17 வயது சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

அவர்கள் வயலுக்கு புல் எடுக்க சென்றனர். வெகுநேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. எனவே நாங்கள் அவர்களை தேடிக் கொண்டு சென்றோம். அப்போது அவர்கள் கைகளும் கால்களும் கட்டப்பட்டு இருந்தது என்று அவர்களின் சகோதரர் பத்திரிக்கையாளார்களிடம் தெரிவித்தார்.

லக்னோ பகுதி ஐ.ஜி. லட்சுமி சிங், அவர்களின் கை கால்களும் கட்டப்பட்டு இருந்ததா என்பதை விசாரிக்க வேண்டும். எங்களால் ஏதும் தற்போது கூற முடியாது. ஏன் என்றால் சம்பவம் நடந்த இடத்திற்கு நாங்கள் செல்வதர்கு முன்பே அவர்களின் சடலங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு துறை ஏ.டி.ஜி. பிரசாந்த் குமார், “அந்த பெண்கள் புதன்கிழமை மதியம் 3 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். பிறகு மாலையில் அவர்கள் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

உன்னாவ் எஸ்.பி. சுரேஷ்ராவ் ஏ. குல்கர்னி “அசோகா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மூன்று பெண்கள் சுயநினைவு அற்ற நிலையில் அவர்களின் சொந்த வயலில் மீட்கப்பட்டனர். அவர்கள் பின்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை எடுப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளனர். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவர்களை வீட்டில் இருப்பவர்கள் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் வயலில் மயக்க நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் வாயில் இருந்து வெள்ளை நிறத்தில் திரவம் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் அவர்களுக்கு விஷம் தரப்பட்டிருக்கலாம் என்றூ கூறியுள்ளனர். அனைத்து முக்கிய நபர்களின் வாக்குமூலத்தையும் பெற்றுள்ளோம். தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

லக்னோ பிரிவு ஏடிஜி எஸ்.என். சபத், அங்கு வன்முறைக்கான அறிகுறிகளோ, போராட்டத்திற்கான அறிகுறிகளோ இல்லை. எங்களின் விசாரணை நடைபெற்று வருகிறது. நாங்கள் அனைத்து கோணங்களிலும் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறினார். உன்னாவ் காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடையில் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Two dalit girls found dead in a field in unnao third critical

Best of Express