மனிதனாக பிறந்த அனைவருமே சமம். ஜாதிகள் என்பது எப்போதுமே இல்லை என்பதை உணர்த்து வகையில், கேரளாவில் இரண்டு தலைமுறையாக ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது. இந்த குடும்பத்தில் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் என்னவென்று தெரியுமா? ‘ஜாதிகள் இல்லை’ சீனியர் ஜாதி இல்லை, ஜீனியர் ஜாதி இல்லை இதுதான் இந்த குடும்பத்தில் பிறக்கும் ஆண் குழந்தை, பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள்.
ஆச்சரியத்தை ஏற்படுத்து இந்த பெயர்களுக்கு பின்னால், ஒரு வரலாறே இருக்கிறதாம். கேரளாவின் கொல்லம் பகுதியில் இருக்கிறது ’ஜாதி இல்லாத வீடு’. இந்த பெயரைச் சொன்னாலே போதுமாம், அந்த பகுதியில் இருப்பவர்கள் , வருபவர்களை அவர்களின் வீட்டிற்கே அழைத்து சென்று விட்டுவிடுவார்கள்.
ஜாதி இல்லை என்பது எல்லாவித்திலும், இந்த குடும்பத்தினர் உணர்த்த விரும்புவது ஏன்? என்று கேள்விக்கு பதில் அவர்கள் கடவுளாக மதிக்கும் அவர்களின் தாய் தந்தையர் தான். 1980 காலக்கட்டத்தில் இரண்டு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் தாய் மற்றும் தந்தை திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
பெற்றோர்கள் இல்லாமல் இவர்களே செய்துக் கொண்ட அந்த திருமணத்தை முறையாக பதிவிட அவர்கள் அலைந்த அந்த நொடி தான் அவர்களை இத்தகைய முடிவினை எடுக்க வைத்துள்ளது. முறையான ஆவணங்கள் மற்றும் இருவேறு சமூகத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் திருமணத்தை முறையாக பதிவு செய்ய முடியவில்லையாம்.
அப்போது அவர்கள், இனிமேல் நமது தலைமுறையில் வரும் பிள்ளைகளின் மேல் ஜாதி என்ற பிம்பம் விழக்கூடாது என்று முடிவெடுத்துள்ளனர். அதன் தொடக்கமாக அவர்களுக்கு பிறந்த இரண்டு மகன்களுக்கும் ஜீனியர் ஜாதி இல்லை, சீனியர் ஜாதி இல்லை என்று வைத்துள்ளனர்.
மேலும், இனிமே அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்கள், பேரன், பேத்திகள் என அனைவருக்கும் ஜாதி இல்லை என்ற பெயரை தலைமுறை பெயராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
தங்களின் தாய்- தந்தையினரின் வாக்கை இன்று வரை அவர்களின் மகன்கள் காப்பாற்றி வருகின்றனர். அத்துடன் தங்களுக்கு பிறந்த பேரன் பேத்திகளின் பெயரில் ஹாலினி’ஜாதி இல்லை’, பரத் ‘ஜாதி இல்லை’ என்ற இணைத்து கூப்பிட்டு வருகிறார்களாம்.
அந்த பகுதியில், இந்த குடும்பம் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக தான் வாழ்ந்து வருகிறார்கள். இன்று வரை அவர்கள் பள்ளி சான்றிதழில் கூட ஜாதியின் பெயரை குறிப்பிட்டதே இல்லையாம். அப்படி கேட்பவர்களிடம் இவர்கள் தரும் ஒரே பதில் ‘ஜாதி இல்லை’