இரண்டுதலை பாம்பை பெற பேராடிய வனத்துறையின் முயற்சி தோல்வி

Two headed snake in westbengal : மேற்கு வங்க மாநிலத்தின் கிராமத்தில் பிடிபட்ட இரண்டு தலை பாம்பை, மக்கள் புராண நம்பிக்கைகளின் அடிப்படையில் தர மறுத்ததால், வனத்துறையின் முயற்சி தோல்வியில் முடிந்தது

two-headed snake, snakes, west bengal, genetic mutation, trending, indian express news
two-headed snake, snakes, west bengal, genetic mutation, trending, indian express news, இரண்டு தலை பாம்பு, மேற்குவங்கம், வனத்துறை

மேற்கு வங்க மாநிலத்தின் கிராமத்தில் பிடிபட்ட இரண்டு தலை பாம்பை, மக்கள் புராண நம்பிக்கைகளின் அடிப்படையில் தர மறுத்ததால், வனத்துறையின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

மேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியை ஒட்டிய காருக்கி கிராமத்தில், இரண்டு தலை கொண்ட பாம்பு ஒன்று பிடிபட்டது. மக்களிடம் இருந்து அந்த பாம்பை மீட்க வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். இது புராண நம்பிக்கை கொண்டது என்றும், இதை வனத்துறையினரிடம் ஒப்படைக்க முடியாது என்று அப்பகுதி மக்கள் மறுத்துவிட்டனர். வனத்துறையினர் எவ்வளவு முறை போராடி பார்த்தும் அவர்களிடமிருந்து அந்த அரிய வகை பாம்பை மீட்க முடியவில்லை.

இரண்டு தலை பாம்பு குறித்து முன்னணி ஊர்வன குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் நிபுணர் கஸ்டவ் சக்ரபோர்தி கூறியதாவது, இரண்டு தலை பாம்பு நிகழ்வு விவகாரத்தில் புராண நம்பிக்கை எல்லாம் ஏதும் இல்லை. மியூட்டேசன் எனப்படும் சடுதிமாற்றத்தால் விளைந்த நிகழ்வே இந்த இரண்டு தலை பாம்பு.

இந்த அரிய வகை பாம்பு வகைகளை அதன் வாழ்விடங்களிலேயே இருந்தால் தான் நீண்டநாள் தாக்குபிடிக்கும். அதை பிடித்து நாம் பாதுகாக்குறோம் பேர்வழி என்று அடைத்து வைத்தால், வெகுசீக்கிரத்தில் உயிரிழந்துவிடும் என்று அவர் மேலும் கூறினார்.
மேற்குவங்க மாநிலத்தில் பிடிபட்ட இரண்டு தலை பாம்பு குறித்த செய்தி சமூகவலைதளங்களிலும் டிரென்டிங் ஆக மாறியுள்ளன. இதுதொடர்பாக, நெட்டிசன்கள் தெரிவித்துள்ள காமெடியான கருத்துக்களை காண்போம்….

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Two headed snake recovered in westbengal

Next Story
அசாம் பதட்டத்தில் உள்ளது, மக்கள் குழப்பத்தில் உள்ளனர் – பாஜகCAB NRC protest
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com