தெலுங்கானா ஆணவக் கொலை : ஒரு கோடி ரூபாய் பேரம் பேசி மருமகனைக் கொன்ற தந்தை

பல நாட்கள் திட்டமிட்டு தன் மருமகனைக் கொன்ற மாருதி ராவ்.

தெலுங்கானா ஆணவக் கொலை : தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வாரம் பிரனய் என்ற இளைஞர் வேறொரு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டாரால் கொலை செய்யப்பட்டார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரிய அளவில் அதிர்ச்சியினையும் சர்ச்சையினையும் உருவாக்கியது.

தெலுங்கானாவைச் சேர்ந்த இளம் ஜோடிகள் ப்ரனய் மற்றும் அம்ருதா பெற்றவர்களின் எதிர்ப்பினை மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

தெலுங்கானா ஆணவக் கொலை

இருதரப்பிலும் பயங்கர எதிர்ப்புகள் இருந்தாலும், அம்ருதா கர்ப்பமாக இருக்கிறார் என்று அறிந்த ப்ரனய் குடும்பத்தினர் அந்த ஜோடிகளுக்கு ஆதரவினை அளித்து வீட்டில் சேர்த்துக் கொண்டனர். ஆனால் அம்ருதா வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வந்தது.

அம்ருதாவின் அப்பா மாருதி ராவிற்கு அம்ருதாவின் மீதும் ப்ரனய் மீதும் கடுமையான கோபத்துடன் இருந்து வந்தார்.

அம்ருதா கர்பமாக இருந்த காரணத்தால் அவரின் தாயுடன் பல்வேறு சந்தேகங்களை கேட்பதற்காக மொபைலில் பேசி வந்து வந்திருக்கிறார் அம்ருதா. அம்ருதாவின் அப்பாவிற்கு இந்த விஷயம் மெல்ல மெல்ல தெரிய வந்திருக்கிறது.

கடந்த வாரம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்ல இருப்பதாக தன் தாயிடம் கூறியிருக்கிறார் அம்ருதா. இந்த தகவல் அம்ருதாவின் தந்தை மாருதி ராவிற்கு தெரிய வந்ததுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ப்ரனயை கொல்ல சதித்திட்டம் தீட்டினார் மாருதி ராவ். ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசி தன்னுடைய மருமகனைக் கொன்றிருக்கிறார் மாருதி ராவ் என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close