பயங்கரவாத சதித் திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேரிடம் விசாரித்ததில், இந்திய விமானப் படை கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபிட்டபோது அவருடன் புகைப்படத்தில் இருந்த அந்நாட்டு ராணுவ வீரரை சந்தித்தது தெரியவந்துள்ளது.
இதனை இதுதொடர்பான வழக்கை விசாரித்து டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் டெல்லி போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜீஷன் காமர் (28), டெல்லியைச் சேர்ந்த ஒசாமா என்கிறத சமி (22)
ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ-ஆல் பயிற்சி பெற்றவர்கள் என்று குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை அதிகாரி ஏ.சி.பி. லலித் மோகன் நேகி கூறுகையில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஹம்சா, இவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். பாலாகோட் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியபோது தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்து பின்னர் அந்நாட்டு ராணுவத்திடம் பிடிபிட்ட இந்திய வீரர் அபிநந்தன் கைதின்போது அவருடன் இருந்ததாக ஹம்சா அவர்கள் இருவரிடமும் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தில் ஹம்சா மேஜராக இருக்கிறார்” என்று லலித் மோகன் நேகி கூறினார்.
ஸ்டாலின் தலைமையில் ஆன்மீக அரசு: சட்டசபையில் சேகர்பாபு விளக்கம்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜான் முகமது ஷேக் (47), உத்தரப் பிரதேசம் ரேபரேலியைச் சேர்ந்த மூல்சந்த் என்கிற சாஜு, உத்தரப் பிரதேசம் பஹ்ரைச் நகரைச் சேர்ந்த முகமது அபு பக்கர், லக்னோவைச் சேர்ந்த அமீர் ஜாவித் ஆகியோரையும் டெல்லி சிறப்பு பிரிபு போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர் என்று சிறப்பு பிரிபு அதிகாரி நீரஜ் தாக்குர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் 2021 ஆம் ஆண்டில் ஒசாமா மற்றும் ஜீஷன் ஐஎஸ்ஐ அமைப்பிடம் பயிற்சி பெற்றனர்.
இவர்கள் இருவரும் தாவூத் இப்ராஹிம் ஆட்களையும் சந்தித்துள்ளனர்.
ஓமனில் மஸ்கட், பாகிஸ்தானில் தட்டா ஆகிய இடங்களுக்கு இவர்கள் சென்றது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. சக்திவாய்ந்த வெடிகுண்டை தயாரிப்பது, ஆயுதங்களை கையாள்வது, துப்பாக்கிச்சூடு பயிற்சி ஆகியவற்றை இவர்கள் கற்றுக் கொண்டது குறித்தும் விசாரிக்கப்பட்டது.
1993ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடிய பஷீர் கானையும் அவர்கள் அடையாளம் காட்டினர். பஷீர், தாவூத் இப்ராஹிமின் ஆட்களில் ஒருவர் ஆவார் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, அபிநந்தன் இந்திய அரசிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“