காஷ்மீர் பள்ளத்தாக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு எதிரான தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்துள்ளது. தெற்கு காஷ்மீரில் நடந்த இந்த தாக்குதலில், பீகாரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள், ஒருவரை காயப்படுத்தினர். ஸ்ரீநகரில் பீகாரைச் சேர்ந்த தெருவோர விற்பனையாளரையும், புல்வாமாவில் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த தச்சரையும் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்ட ஒரு நாள் கழித்து சமீபத்திய தாக்குதல் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் குறித்த ட்வீட்டரில், ஜம்மு காஷ்மீர் போலீசார் கூறியதாவது: குல்காமின் வான்போ பகுதியில் வெளிமாநில (உள்ளூர் அல்லாத) தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த பயங்கரவாத சம்பவத்தில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த தாக்குதல் கஞ்சிபோரா கிராமத்தில் நடந்தது. தாக்குதலில் பலியானவர்கள் ராஜா ரேஷி மற்றும் ஜோகிந்தர் ரேஷி, மற்றும் காயமடைந்த தொழிலாளி சுன் சுன் ரேஷி என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள். கை மற்றும் முதுகில் பலத்த காயமடைந்த தொழிலாளி ஆனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் J&K போலீஸ் தரப்பிலிருந்து முரண்பாடான தகவல்களுக்கு வழிவகுத்தது. "காஷ்மீர் IGP" சார்பாக காஷ்மீர் காவல் கட்டுப்பாட்டு அறை (PCR) SSP வெளியிட்டதாக கூறப்படும் குறிப்பில், "உங்கள் அதிகார வரம்பில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் இப்போது அருகிலுள்ள போலீஸ் அல்லது சிஏபிஎஃப் அல்லது ராணுவ நிறுவனங்கள் அல்லது முகாம்களுக்கு அழைத்து வரப்பட வேண்டும். விஷயம் மிக அவசரம்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
காஷ்மீர் IGP விஜய்குமார்-ஐ தி இந்தியன் எக்ஸ்பிரஸை தொடர்பு அந்த குறிப்பை "போலி" என்று குறிப்பிட்டார். காஷ்மீர் காவல் கட்டுப்பாட்டு அறை (PCR) SSP ஜூபைர் கானை தொடர்பு கொள்ள முடியவில்லை. இருப்பினும், இரண்டு மாவட்ட அளவிலான J&K போலீஸ் அதிகாரிகள் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மூத்த சிஆர்பிஎஃப் அதிகாரி, தங்களுக்கு அந்த குறிப்பு கிடைத்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
"நாங்கள் ஆலோசனையைப் பெற்று, உள்ளூர் அல்லாதவர்களை மாற்றத் தொடங்கினோம். ஆனால் அவர்கள் மாவட்டத்தின் தொலைதூரப் பகுதிகள், காவல்துறை இல்லாத பகுதிகள் அல்லது காவல்துறை குறைவான எண்ணிக்கையில் இருக்கும் பகுதிகள் உட்பட மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கிறார்கள் என்பதால், அவர்களைப் பாதுகாப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது” என மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரி கூறினார்.
மதிப்பீடுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் வெளியில் இருந்து 3-4 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்காக J&K பள்ளத்தாக்குக்குச் செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே வெளியேறினாலும், சிலர் ஆண்டு முழுவதும் காஷ்மீரில் தங்கியிருப்பார்கள்.
J&K பள்ளத்தாக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும், அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்க முடியாது என்று மற்றொரு மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். மேலும், குளிர்காலப் பருவம் கிட்டத்தட்ட முடிவடைகிறது. எனவே அவர்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதே எளிதான வழி. நீங்கள் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கலாம் ஆனால் அவர்கள் பகலில் வேலைக்கு கிளம்பும்போது அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வட்டாரங்கள் அந்த குறிப்பின் உண்மைத்தன்மை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கை பாதுகாப்பு நிறுவனத்திற்குள் விவாதிக்கப்பட்டது என்று கூறினர். ஆப்பிள் சீசன் காரணமாக J&K பள்ளத்தாக்கு வெளியில் இருந்து வரும் தொழிலாளர்களால் நிரம்பி வழிகிறது. அவர்களை குறிவைக்கும் முழு நெட்வொர்க்கும் நடுநிலையாக்கப்படும் வரை அவர்கள் அனைவருக்கும் வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பை வழங்குவது மிகவும் கடினமாக இருக்கும், ”என்று ஒரு அதிகாரி கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் எட்டு தனித்தனி தாக்குதல்களில் ஒன்பது பொதுமக்கள் J&K பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டனர். உத்திரபிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவிர, பலியானவர்களில் ஸ்ரீநகரில் உள்ள ஒரு பள்ளி முதல்வர் மற்றும் ஜம்முவிலிருந்து வந்த அதே பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், ஸ்ரீநகரில் ஒரு முக்கிய தொழிலதிபர் மற்றும் பந்திபோராவில் ஒரு உள்ளூர் டாக்ஸி டிரைவர் ஆகியோர் அடங்குவர்.
பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் இந்த கொலைகளை கண்டித்துள்ளன.
தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை நடந்த கொலைகளை "துரதிருஷ்டவசமானது" என்றும் "காஷ்மீரிகளை இழிவுபடுத்தும் சதி" என்றும் விவரித்தார். பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி, "அப்பாவி பொதுமக்கள் மீது மீண்டும் மீண்டும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கண்டிக்க போதுமான வார்த்தைகள் இல்லை" என்று ட்வீட் செய்துள்ளார்.
அப்னி கட்சியின் தலைவர் அல்தாஃப் புகாரி, "விசாரணைகளை துரிதப்படுத்தவும்" மற்றும் கொலைகளுக்குப் பின்னால் உள்ளவர்களைக் கண்டுபிடிக்கும்படியும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். J&K காங்கிரஸ் தலைவர் குலாம் அஹ்மத் மிர் இந்த கொலைகளை வன்மையாக கண்டித்தார். மக்கள் மாநாட்டின் தலைவர் இம்ரான் ராசா அன்சாரி கூறுகையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய நிர்வாகமும் மக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.