சிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் - நரேந்திர மோடி

நாம் சிறுபான்மை மக்களிடம் இருக்கும் பயத்தினை உடைத்து அவர்களின் நம்பிக்கையினைப் பெற வேண்டும்

Ravish Tiwari

Two Narendra Modi speeches Regional aspirations sabka vishwas : பிரதமர் நரேந்திர மோடி, முதல் முறையாக பதவிக்கு வரும் போது பாராளுமன்ற மத்திய வளாகத்தில் நின்று தன்னுடைய உரையை துவங்கினார். ஐந்து வருடங்கள் கழித்து அதே இடத்தில் நின்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய உரையை நேற்று மாலை நிகழ்த்தினார்.

Two Narendra Modi speeches Regional aspirations sabka vishwas

2014ம் ஆண்டு, அன்றைய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, இந்த அரசு ஏழை மக்களுக்கானது என்று அன்று அவர் குறிப்பிட்டார். நேற்று நடந்த உரையில், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியானது ஏழைகளுக்கானது. இம்முறையும் ஏழைகள் தான் எங்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்கினார்கள் என்று கூறியுள்ளார்.

முதல்  உரையின் போது, சப்கா சாத், சப்கா விகாஸில் இருந்து சப்கா சாத், சப்கா விகாஸ் ஆர் சப்கா விஸ்வாஸ் என்று குறிப்பிட்டார். இந்தியாவினை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்வதாற்கான தாரக மந்திரம் அது. புதிய உயரத்தினை அடைய இருக்கும் இந்தியா என்ற வார்த்தைகள் தான் மோடிக்கு இம்முறையும் வெற்றி வாய்ப்பினை குவித்துள்ளது.

2014ம் ஆண்டு ஆட்சிக்கு ஒரு முதல்வர், பிரதமராக வரும் போது அவருடைய உரை நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்குவக்குவதாக இருந்தது. ஆனால் நேற்று அவர் நிகழ்த்திய உரை ஒரு பொறுப்பு மிக்க நாட்டின் பிரதமர் உரையாக இருந்தது.

இந்த செய்தியின் ஆங்கிலப் பிரதியைப் படிக்க

நேற்று தேசிய ஜனநாய கூட்டணிகளின் ஒருமித்த தலைவராக பிரதமர் மோடியை வழிமொழிந்தனர் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். என்.டி.ஏ கூட்டணியில் வெற்றி பெற்ற எம்.பிக்களின் கூட்டத்தில் இந்த உரையை நிகழ்த்தினார் மோடி.

பிராந்திய மக்களின் கனவுகள், பாஜகவை தேர்வு செய்தாவர்களுக்கும் அளிக்கப்படும் உறுதி மொழிகள், நாட்டின் வளர்ச்சிக்காக கூட்டணிக் கட்சிகள் மீது உருவாகியுள்ள புதிய அழுத்தங்கள் என கடந்த போது கவனம் பெறாத விவகாரங்களுக்கும் இம்முறை முக்கியத்துவம் அளித்து பேசினார் மோடி.

சிறுபான்மை மக்கள் பலவருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஆனால் இனிமேல் இது போன்ற பிரச்சனைகள் அவர்களுக்கு நேராது பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களின் பொறுப்பே என்றும் அவர் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக வெறும் வாக்கு வங்கிகளுக்காகவே சிறுபான்மையின மக்களிடம் ஒரு பயத்தினை உருவாக்கி வைத்துள்ளனர். நாம் அந்த பயத்தினை உடைத்து அவர்களின் நம்பிக்கையினைப் பெற வேண்டும் என்று அவர் அந்த உரையில் குறிப்பிட்டார்.

2014ம் ஆண்டு உரையின் போது சிறுபான்மையின மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தோ, எதிர்கட்சியினரின் வாக்கு வங்கிகள் குறித்தோ மோடி பேசவில்லை.

நேற்றைய நிகழ்வின் பிராந்திய கனவுகளுடன் கூடிய தேசிய இலக்கு என்ற பதத்தினை முன்வைத்து இதன் மூலம் நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லவேண்டும் என்று கூறினார். பிராந்திய மக்களின் தேவைகள் குறித்து 2014ம் ஆண்டு அவர் பேசவில்லை. நேற்றைய உரையின் போது அகலி தளம், சிவசேனா, ஜே.டி.யூ, எல்.ஜே.பி மற்றும் அதிமுக தலைமைகளுக்கு இடங்கள் அளிக்கப்பட்டன.

வி.ஐ.பி. கலாச்சாரம் குறித்து எம்.பிக்களை எச்சரிக்கை செய்துள்ளார் மோடி. 2014ம் ஆண்டினைப் போலவே இம்முறையும், அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார் மோடி.

2014ம் ஆண்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்ட போது, நாடாளுமன்ற வாசலில் நுழையும் போது தலை வணங்கினார். நேற்றைய உரையில், இந்திய அரசியல் சாசனத்திற்கு தலை வணங்கிவிட்டு தன்னுடைய உரையைத் துவங்கினார் மோடி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close