ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் சமீபத்தில் ஆதரவளித்து ஆசீர்வதித்த நிலையில், தற்போது மேலும் 2 ராமர் கோவில் நிர்வாகிகள் ராகுலுக்கு ஆதரவளித்துள்ளனர். அயோத்தியில் இருந்து அதிகமான வரவேற்பு வருகிறது.
விஷ்வ இந்து பரிஷத்தை (விஎச்பி) சேர்ந்த சம்பத் ராய் முதல் ஹனுமான் கார்ஹி மஹந்த் மற்றும் ராமர் கோவில் அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி வரை ராகுலுக்கு ஆதரவளித்துள்ளனர். இதில், ராய், நாட்டை ஒன்றிணைப்பதற்கான காரணத்தை தான் ஆதரிப்பதாக கூறி,
ஆர்எஸ்எஸ் ஆகட்டும் அல்லது பிரதமராகட்டும் யாரும் யாத்திரையை விமர்சிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை உத்தரப் பிரதேச மாநிலத்தில் நுழைந்து நடைபெற்று வருகிறது. யாத்திரையின் முன்தினம் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் பரூக் அப்துல்லா, முன்னாள் ரா அமைப்பு தலைமை அதிகாரி தூலத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், மும்பையில் உள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் உ.பி வழியாக ராகுல் யாத்திரை செல்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், நிகழ்ச்சிகளை நடத்த அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறினார
யோகி கேள்வி
ஆனால் இங்கு கேள்வி, " அவர்களின் நோக்கம் மற்றும் லட்சியம் என்ன என்பதுதான். நீங்கள் இணைப்பதைப் பற்றி பேசுகிறீர்கள் என்றால், அது உங்கள் வேலை மற்றும் அறிக்கைகள் மூலம் பிரதிபலிக்க வேண்டும். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, பிரதமர் சொல்வது போல், தேசம் முதன்மையானது, கட்சிக்கு மேலாக நாட்டை தான் முதன்மையாக நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால் பலருக்கு கட்சி தான் மேலானதாக உள்ளது. தவாங் சம்பவத்திலும், வேறு சில விவகாரங்களிலும் அவர்கள் அறிக்கை பார்த்தால், நாட்டை இணைக்க அல்ல, பிளவுகளை உருவாக்குவது போல் உள்ளன. எதிரிகளை ஊக்குவிப்பது போல் உள்ளன. இதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
யாத்திரையை பிரதமர் விமர்சித்தாரா?
சத்யேந்திர தாஸ் ராகுலுக்கும் யாத்திரைக்கும் ஆசி வழங்கியது குறித்து கேட்டபோது, "சம்பத் ராய் பதிலளித்தார். சம்பத் ராய் 2020-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட 32 பேரில் ஒருவர். தற்போது அவர், விஎச்பி சர்வதேச துணைத் தலைவர் மற்றும் ராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். அவர் கூறுகையில், யார் யாத்திரையை விமர்சித்தார்கள்? நான் ஆர்எஸ்எஸ்எஸ்யைச் சேர்ந்தவன். சங்க் அமைப்பில் யாராவது ராகுல் யாத்திரையை விமர்சித்தார்களா? அல்லது பிரதமர் விமர்சித்தாரா?
ஒரு இளைஞன் கால் நடையாக நடக்கிறான், நாட்டைப் புரிந்துகொள்ள முயல்கிறான். இது பாராட்டத்தக்கது. 50 வயதான இளைஞன் இந்த காலநிலை, சூழலிலும் 3000 கி.மீ தூரம் நடக்கிறார். நாங்கள் அவரை பாராட்டுகிறோம். உண்மையில் அனைவரும் இதை செய்யவேண்டும், யாத்திரை செய்ய வேண்டும்" என்று ராய் கூறினார்.
ராமர் உத்வேகம் அளிப்பார்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஹனுமான் கர்ஹி கோவில் மஹந்த் சஞ்சய் தாஸ் கூறுகையில், "உத்தரதிகாரி தலைமை அர்ச்சகர் ஞான் தாஸ் மகாராஜுக்கு காங்கிரஸிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் நாங்கள் இப்போது கங்காசாகரில் இருக்கிறோம். அதனால் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. மகாராஜின் ஆசீர்வாதங்களைத் தெரிவிக்கும் வகையில் எழுத்துப்பூர்வ பதில் அனுப்பினோம். குருதேவரின் ஆசீர்வாதம் அவருக்கு இருக்கிறது, இதை நாங்கள் தெரிவித்தோம். நாட்டை ஒன்றிணைப்பது போன்ற நோக்கத்திற்காக யாத்திரை மேற்கொள்வதில் தவறில்லை" என்றார்.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி செய்தியாளர்களிடம் கூறும்போது, "யார் ராமரின் பெயரைச் சொன்னாலும், பாரத மாதாவின் பெயரைச் சொல்லி செயல் செய்தாலும் அதை நாங்கள் பாராட்டுவோம். தேசம் ஒற்றுமையாகவும் திறமையாகவும் இருக்க ராமர் அவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்று கூறுவார்.
மேலும், யாத்திரை நாட்டை ஒன்றிணைக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இது ஒரு நல்ல முழக்கம், இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
திகம்பர் அகாரா மற்றும் நிர்மோஹி அகாராவின் தலைவர்கள் தங்களுக்கு காங்கிரஸிடமிருந்து அழைப்பு வரவில்லை என்று கூறினார். நிர்மோஹி அகாரா தலைவர் ராம் தாஸ் கூறுகையில், "எங்களுக்கு அழைப்பு வரவில்லை, ஆனால் தேச நலன், கலாச்சாரம், இந்திய ஒற்றுமைக்கான இந்த முயற்சியை ஆதரவளிக்கிறோம்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.