வீடியோ: ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்கள்: ஜீப்பில் ஏற்ற போலீசார் மறுத்ததால் உயிரிழந்த பரிதாபம்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஜீப்பில் கறையாகிவிடும் என்பதால், விபத்துக்குள்ளான 2 இளைஞர்களை வாகனத்தில் ஏற்ற போலீசார் மறுத்ததால், அந்த இளைஞர்கள் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஜீப்பில் கறையாகிவிடும் என்பதால், விபத்துக்குள்ளான 2 இளைஞர்களை வாகனத்தில் ஏற்ற போலீசார் மறுத்ததால், அந்த இளைஞர்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அர்பீத் குர்ரானா (வயது 17) மற்றும் சன்னி கார்க் (வயது 17) இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர்களை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நிகழ்விடத்துக்கு போலீசார் 3 பேர், காவல் துறை வாகனத்தில் வந்தனர்.

இரண்டு இளைஞர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையிலும், அவர்களை தங்கள் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் போலீசார் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

அங்கிருந்த பொதுமக்கள், இளைஞர்களை வாகனத்தில் ஏற்றிக்கொள்ளுமாறு கெஞ்சியும் போலீசார் அதற்கு உடன்படவில்லை. இதையடுத்து, அருகிலிருந்த காவல் நிலையத்தில் இருந்த வாகனத்தில் இளைஞர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அதற்குள் இரண்டு இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட போலீசார் 3 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close