Advertisment

மக்களே உஷார்! பாலிசி என்ற பெயரில் கால் செய்து 350 பேரை ஏமாற்றிய கில்லாடி பெண்கள்

அந்தந்த மொழிகளில் பேசுவதற்காகவே டெலி காலிங் பெண்களையும் வேலைக்கு அமர்த்தி இருக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fake call centre

fake call centre

Mahender Singh Manral :

Advertisment

குறைந்த பிரீமியத்தில் சுகாதார காப்பீடு என்ற பெயரில் போலி தளத்தை நடத்தி 350 க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றிய 2 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் வாடிக்கையாளர்களின் நம்பர்களை 5 பைசா முதல் 50 பைசா வரை விலை பேசி கால் சென்டர் ஊழியர்களிடமிருந்து பெற்றுள்ள அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லோருக்குமே இந்த சந்தேகம் எழாமல் இருந்ததில்லை. அடிக்கடி கால் செய்து தொல்லை செய்யும் இந்த கஸ்டமர் கேர்களுக்கு நம்ம மொபைல் நம்பரை யார் தந்தார்கள்?என்பது தான். லோன், பாலிசி, கிரேடி கார்டு, ஆஃபர், ரியல் எஸ்டேட் என நாள் ஒன்றுக்கு ஒரு மொபைல் எண்ணுக்கு குறைந்தது 5 காலாவது இப்படி வந்து விடும். நாம் வேண்டாம், நேரமில்லை என்று சொன்னாலும் அவர்கள் விடு மாட்டார்கள். நம் ஆசையை தூண்டும் படி பேசி எப்படியாவது ஏமாற்ற பார்ப்பார்கள்.

அப்படி ஒரு சம்பவம் தான் டெல்லியில் அரங்கேறியுள்ளது. சுமன் லதா, ஜோதி என்ற 2 பெண்கள் இந்த நூதன மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள டெல்லி சைபர் பிரிவு போலீசார் இந்த மோசடியில் இவர்கள் ஈடுப்பட்டது குறித்த அனைத்து தகவல்களையும் பகிர்ந்துள்ளனர்.

இந்த இரண்டு பெண்களும், குறைந்த பிரீமியத்தில் காப்பீட்டை வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு கால் செய்து பேசியுள்ளனர். அவர்கள் வீட்டில் உடல் நலம் சுகம் இல்லாதவர்கள் இருக்கிறார்களா? பண பின்புலம், குடும்ப பின்புலம், வாகன விவரங்கள், சொத்து விவரங்கள் என அனைத்து விவரங்களையும் கால் செண்டர் ஊழியர்கள் இவர்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களை கொண்டு இந்த 2 பெண்களும் வாடிக்கையாளர்களுக்கு கால் செய்து மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

மிகவும் திறமையுடன் தங்களது வேலைகளை செய்து வந்த இந்த பெண்கள், வாடிக்கையாளர்களிடம் அந்தந்த மொழிகளில் பேசுவதற்காகவே டெலி காலிங் பெண்களையும் வேலைக்கு அமர்த்தி இருக்கின்றனர். http://www.rakshahealthcare.com, http://www.paramountmax.com http://www.apollohealths.com போன்ற பெயரில் வலைத்தளங்களை நடத்தி வந்தனர்.

இவர்களிடம் பீரியம் செலுத்தி வந்த விபு சக்கரவர்த்தி என்பவர் போலீசில் கொடுத்த புகார் அடிப்படையில் இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் இந்த வலைத்தளங்களை சோதித்து பார்த்த போது அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்தது. அதாவது இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்படுவதற்கு 1 மணி நேரம் முன்பு வரை இந்த தளங்கள் ஆக்டிவில் இருந்தது.

சக்கரவர்த்தி தனது முதல் பீரியம் தொகையை செலுத்திய பின்பு, இவர்களை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்களின் நம்பர்கள் உபயோகத்தில் இல்லாமல் போனதால் சந்தேகத்தில் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் 2 பெண்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment