பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசின் கூற்றை நிராகரித்தது ரிசர்வ் வங்கி

ரித்து சாரின் நவம்பர் 8, 2016ல், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணி நேரத்திற்கு முன்புதான், இந்திய ரிசர்வ் வங்கி, அந்த பணமதிப்பிழப்பு திட்டத்துக்கான அனுமதியை வழங்கியது. ஆனால், அதன் பிறகு இரண்டு காரணங்களை சொல்லி ரிசர்வ் வங்கி அந்த திட்டத்திற்கு அனுமதியும் மறுத்தது. அவை, அன்று இரவு பிரதமர் உச்சரித்த ‘கருப்பு பணம்’ மற்றும் ‘கள்ள நோட்டுகள்’ என்ற வார்த்தைகள். மனமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட அன்று மாலை […]

PPF rate cut, covid 19 news

ரித்து சாரின்

நவம்பர் 8, 2016ல், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணி நேரத்திற்கு முன்புதான், இந்திய ரிசர்வ் வங்கி, அந்த பணமதிப்பிழப்பு திட்டத்துக்கான அனுமதியை வழங்கியது. ஆனால், அதன் பிறகு இரண்டு காரணங்களை சொல்லி ரிசர்வ் வங்கி அந்த திட்டத்திற்கு அனுமதியும் மறுத்தது. அவை, அன்று இரவு பிரதமர் உச்சரித்த ‘கருப்பு பணம்’ மற்றும் ‘கள்ள நோட்டுகள்’ என்ற வார்த்தைகள்.

மனமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட அன்று மாலை 5.30 மணிக்கு, ரிசர்வ் வங்கியின் 561வது மத்திய போர்டு மீட்டிங்கில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, சென்ட்ரல் வங்கியின் இயக்குனர்கள், இந்த திட்டத்தை பாராட்டினார்கள். அதேசமயம், பணமதிப்பிழப்பின் மூலம், நிகழ் காலத்தின் ஜிடிபி குறுகிய காலத்திற்கு பாதிக்கும்” என்றும் எச்சரிக்கப்பட்டது.

நவம்பர் 7, 2016ல், ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் இந்த பணமதிப்பிழப்பு திட்டத்தின் வரைவு அறிக்கையை பெற்ற பிறகு, அரசு குறிப்பிட்டிருந்த 500, 1000 நோட்டுகள் மதிப்பிழப்பு என்ற திட்டம் குறித்தும் இதனால், கருப்பு பணம் ஒழியும் என்று குறிப்பிட்டது குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டது.

பணமதிப்பிழப்பு குறித்து நியாயம் கற்பிக்க மத்திய நிதியமைச்சகம் அளித்த தகவல்கள்

இதுகுறித்து அரசாங்கம் அளித்த வெள்ளை காகிதத்தில் கருப்பு பணம் ஒழிப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், “நாட்டில் பெரும்பாலான கருப்பு பணங்கள் தொகையாக இல்லை. தங்கம் மற்றும் அசையா சொத்துக்களாக உள்ளன. இந்த பணமதிப்பிழப்பின் மூலம் நாம் அவற்றை வெளிக் கொண்டு வரமுடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கள்ள நோட்டை பொறுத்தவரை, 1000 மற்றும் 500 போன்ற பெரிய அளவிலான தொகையில் தான் அதிகம் புழங்குகிறது. கிட்டத்தட்ட, இந்த ரூபாய் நோட்டுகளில் மட்டும் 400 கோடி அளவிற்கு கள்ள நோட்டுகள் வலம் வருகிறது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி, “கள்ள நோட்டுகள் இந்த அளவிற்கு இருந்தாலும், நாட்டின் மொத்த பணப் புழக்கத்தை ஒப்பிடுகையில், இந்த 400 கோடி என்பது அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை உடனடியாக மதிப்பிழப்பு செய்வதன் மூலம், மருத்துவம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டு துறையிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தனியார் மருந்தகங்கள் இந்த லிஸ்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூறுகையில், “உள்ளூரில் அதிக தூரம் பயணம் செய்யும் மக்கள், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளையே அதிகம் வைத்திருப்பார்கள். அதன் மூலம் தான், டாக்ஸி, ரயில், விமானம் போன்றவற்றிற்கு கட்டணம் செலுத்துவார்கள். உடனடி பணமதிப்பிழப்பு செய்தால், சுற்றுலாப் பயணிகளை பெரிதாக பாதிக்கும்” என்றும் அறிவுறுத்து இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதுகுறித்து தீவிரமாக இவ்வாறு விவாதித்து வந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வரும் திட்டம் மற்றும் கள்ள நோட்டுகளின் ஒழிப்புகளுக்காக நிதியமைச்சகம் சொன்ன காரணங்களை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை.

இரண்டாவதாக, ஏடிஎம் மூலம் எடுக்கப்படும் பணத்தின் அளவு குறையும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, கடந்த 2016, அக்டோபர் மாதத்தில் ரூ.2.54 லட்சம் கோடி ஏடிஎம்களில் இருந்து பணத்தை மக்கள் எடுத்துள்ளனர்.

2018, ஆகஸ்ட் மாத நிலவரப்படி ரூ.2.75 லட்சம் கோடி மக்கள் ஏடிஎம்கள் மூலம் எடுத்துள்ளனர். ஏறக்குறைய ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் அளவு 8 சதவீதம் உயர்ந்துள்ளது. பணத்தின் புழக்கம் குறையும் என்று கூறப்பட்ட நிலையில், அதன் புழக்கம் கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்தே காணப்படுகிறது.

ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்ட அந்த 2016-ம் ஆண்டில் மட்டும் டிசம்பர் மாதத்தில் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் அளவு ரூ.1.06 லட்சம் கோடியாகக் குறைந்திருந்தது. ஆனால், மாதங்கள் செல்லச் செல்ல ஏடிஎம் களில் இருந்துபணம் எடுக்கும் அளவு படிப்படியாக உயர்ந்தது. ஆனால், புதிதாக ஏடிஎம் வைக்கும் அளவு குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக 8 ஆயிரம் ஏடிஎம் மையங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Two years after demonetisation okaying note ban rbi rejected govt claim on black money fake notes

Next Story
நிஜத்தில் ஒரு ராட்சசன்… 3 வயது குழந்தை வாயில் வெடி வைத்த கொடூரன்uttar pradesh, 3 வயது குழந்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com