பினராயி விஜயன் : தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்த பின்பு கேரளாவில் பெருத்த வெள்ளப் பெருக்கும், இயற்கை சீரழிவும் ஏற்பட்டுள்ளது. அதனை ஈடுகட்ட இந்திய அரசாங்கம் 600 கோடி ரூபாயினை நிதியாக கொடுத்தது.
கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ள சேதாரத்தினை பார்த்து வந்த ஐக்கிய அரபு அமீரகம் தன்னுடைய சார்பாக 700 கோடி ரூபாய் நிதியினை அளிப்பதற்காக உறுதி அளித்திருக்கிறது. ஆனால் இந்தியா 2004ம் ஆண்டில் இருந்து இயற்கை பேரிடர் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதை நிறுத்திவிட்டது. ஆகவே அமீரகத்தில் இருந்து வரும் பணத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என்று மறுப்பு கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.
அது தொடர்பான முழுமையான செய்தியினைப் படிக்க
பினராயி விஜயன் கருத்து
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்கு பேட்டி அளித்த பினராயி விஜயன் “அமீரகத்தினை வேறொரு நாடாக எப்போதும் பார்க்க இயலாது. அமீரகத்தின் உருவாக்கத்திற்கு இந்தியர்களின் பங்கு, குறிப்பாக கேரள மக்களின் பங்கு மிகவும் இன்றி அமையாத ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.
மேலும் கேரளாவின் நிதித் துறை அமைச்சர் தாமஸ் ஐசாக் இது பற்றி குறிப்பிடுகையில் “ இந்திய அரசு வழங்கியிருக்கும் நிதி உதவியானது, எங்களின் தேவையை சரிகட்டும் அளவிற்கான தொகை இல்லை. ஆகவே மற்றவர்கள் அளிக்கும் நிதியினை மத்திய அரசு தடுக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.
இது குறித்த எந்த விதமான அரசியல் விளையாட்டிற்கும் நான் தயாராக இல்லை. அமைதியாக இருந்து நடப்பது என்ன என்பதை மட்டுமே நான் பார்க்க விரும்புகிறேன்.
மேலும் கேரளாவை மீட்டெடுப்பதற்கு பதிலாக புதிய கேரளத்தை உருவாக்குவதில் தான் அனைவரும் மிக்க முனைப்புடன் ஈடுபட்டு வருகிறோம். மிகச் சிறந்த திட்டங்களுடன் கேரளா மீண்டும் உருவாகும் என்று நம்புகிறோம் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.