வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு நாடான எமிரேட் 700 கோடி நிதி வழங்கியுள்ளது.
அரபு நாடு எமிரேட் 700 கோடி:
இயற்கை எழில் பொங்கும் அழகு தேசமான கேரளா கடந்த 1 வாரமாக வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வரலாறு காணாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் மக்கள் உடைமைகளை, வீடுகளை இழந்து வாடி வருகின்றன.
கேரளாவின் நிலையைக் கண்டு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர். தமிழகம் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து நிவாரண நிதிகள் கேரளாவுக்கு அனுப்பட்ட வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. வரும் 25-ம் தேதி வரை லேசான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் வருத்தத்துடன் அறிவித்தார். வரலாறு காணாத இந்த சேதத்தால், கேரள கனமழையை தீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்தது.
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா
இந்நிலையில் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு ஐக்கிய அரபு நாடான எமிரேட் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இது தொடா்பாக ஐக்கிய அரபு அமீரக அதிபா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஐக்கிய அரபு அமீரகத்தின் வளா்ச்சியில் கேரளா மக்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அப்படிப்பட்ட கேரளா தற்போது மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில் அவா்களுக்கு உதவ கடமைப்பட்டுள்ளோம். வரலாறு காணாத இழப்பை சந்தித்துள்ள கேரளாவிற்கு மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்த மனம் உருகி பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “வெள்ள பாதிப்புகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தக்க சமயத்தில் எமிரேட் செய்த உதவியை நாங்கள் என்றும் மறவமாட்டோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”மீட்பு நடவடிக்கை, மறு சீரமைப்புப் பணிகள், நிவாரணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் கூட்ட ஆளுநருக்கும் பரிந்துரை செய்துள்ளேன்” என்றார்.