Udaipur killing on video | ‘Do something spectacular’: Man from Pak told accused: உதய்பூரில் தையல்கடைக்காரர் கன்ஹையாலால் கொல்லப்பட்டது, பாகிஸ்தானில் "சல்மான் பாய்" என அடையாளம் காணப்பட்ட ஒருவரால் "நுணுக்கமாக திட்டமிடப்பட்டது" மற்றும் "தூண்டப்பட்டது" என்று தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கண்டறிந்துள்ளது. "அமைதியான போராட்டங்கள் எந்த பலனையும் தராது" என்பதால் நபிகள் நாயகத்தைப் பற்றிய கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக அற்புதமான ஒன்றைச் செய்ய வேண்டும்" என்று சல்மான் பாய், குற்றவாளிகளில் ஒருவரிடம் கூறியுள்ளார் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.
கன்ஹையாலாலை கத்தி மூலம் தாக்கும் வீடியோவில் உள்ள கௌஸ் மற்றும் முஹம்மது ரியாஸ் அடாரி ஆகிய இருவரும், கடந்த மாத தொடக்கத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை கூறியதற்காக பா.ஜ.க.,வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அதன் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்: அமராவதியில் கடை உரிமையாளர் கொலை.. நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவான சமூக ஊடகப் பதிவுதான் காரணமா?
ஆதாரங்களின்படி, "பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிர இஸ்லாமிய அமைப்பான" தாவத்-இ-இஸ்லாமியின் அழைப்பின் பேரில் 45 நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கௌஸ் டிசம்பர் 2014 இல் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தார். ஜனவரி 2015 இல் இந்தியா திரும்பிய பிறகு, அவர் ஒரு சில வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ந்தார் மற்றும் பாகிஸ்தானில் உள்ள "சல்மான் பாய்" மற்றும் அபு இப்ராஹிம் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்தார்.
NIA இன் முதற்கட்ட விசாரணையின்படி, கௌஸ் மற்றும் ரியாஸ் அடாரி ஆகியோர் "ஜூன் 10-15 தேதிகளில்" தாக்குதலைத் திட்டமிடத் தொடங்கினர். கன்ஹையாலாலின் 'சுப்ரீம் டெய்லர்ஸ்' அமைந்திருந்த தன்மண்டி பகுதியைச் சேர்ந்த "பாப்லா பாய்" என்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபர், 10-11 பேரைக் குறிவைத்து, அவர்களைத் தாக்க வெவ்வேறு குழுக்களை நியமித்ததாக கௌஸ் மற்றும் ரியாஸ் அடாரி ஏஜென்சியிடம் கூறியதாக அறியப்படுகிறது.
"பாப்லா பாயின் பங்கு மற்றும் பிற விவரங்கள் விசாரிக்கப்படுகின்றன" என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
கௌஸ் மற்றும் ரியாஸ் அடாரி ஆகியோர் பற்றிய முதற்கட்ட விசாரணையில், தாக்குதலுக்கு முந்தைய இரண்டு அல்லது மூன்று வாரங்களில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய உள்ளூர் WhatsApp குழுக்களில் ஒரு சில நபர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் பரப்பப்பட்டன என்பதும் தெரியவந்துள்ளது. "கன்ஹையாலாலின் புகைப்படம் மற்றும் விவரங்களும் இந்த குழுக்களில் ஒன்றில் பகிரப்பட்டன" என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
கௌஸ் மற்றும் ரியாஸ் அடாரி பணிபுரியும் இடத்திற்கு அருகில் கன்ஹையாலாலின் கடை இருந்ததால், அவர்களுக்கு கன்ஹையாலால் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, உள்ளூர் இளைஞர்கள் சிலர் அவர்களுக்கு "தீவிரமாக உதவினார்கள்" என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களில் இருவரான வாசிம் மற்றும் மொஹ்சின் கான், ஜூன் 28 ஆம் தேதி தாக்குதலுக்கு முன், தையல் கடையின் மறுபகுதியை நோட்டமிட்டனர், இது குற்றம் சாட்டப்பட்டவர்களின் விரிவான திட்டமிடலைக் காட்டுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
மொஹ்சின் மற்றும் ஆசிப் ஹுசைன் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தன்று, கௌஸ் மற்றும் ரியாஸ் அடாரி ஆகியோர் தனித்தனி வாகனங்களில் கன்ஹையாலாலின் கடை அமைந்துள்ள மல்தாஹா சந்தைக்கு வந்து மொஹ்சின் கடைக்கு அருகில் நிறுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்கள் திரும்பவில்லை என்றால், "வேலை முடிந்தது" என்று அர்த்தம், மேலும் அவர் இருசக்கர வாகனத்தை குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற செய்தியுடன் மொஹ்சினிடம் தனது ஸ்கூட்டரின் சாவியை வைத்திருக்குமாறு கௌஸ் கூறியதாக அறியப்படுகிறது.
கொலைக்குப் பிறகு, கௌஸ் மற்றும் ரியாஸ் அடாரி ஆகியோர் “ஷோப் பாய்” என்று அடையாளம் காணப்பட்ட ஒருவரின் அலுவலகத்திற்குச் சென்றனர், அங்கு அவர்கள் அதே ஆடைகளை அணிந்து மற்றொரு வீடியோவைப் பதிவு செய்தனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கும் இந்த வீடியோவை, அவர் உறுப்பினராக இருந்த பல உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களில் ரியாஸ் அடாரி பதிவேற்றினார்.
அப்போது கௌஸின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பின்னர் ஆடை மாற்ற மற்றொரு நபரின் பட்டறைக்குச் சென்றனர். அவர்கள் அஜ்மீர் ஷெரீப் செல்ல திட்டமிட்டிருந்தனர், மேலும் அவர்களால் கார் ஏற்பாடு செய்ய முடியாததால், ரியாஸ் அடாரியின் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். எனினும், ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள பீம் என்ற இடத்தில் அவர்களை வழிமறித்து போலீஸார் கைது செய்தனர்.
செவ்வாயன்று 40 வயதான கன்ஹையாலால் கொல்லப்பட்டது உதய்பூரில் தீவைப்பு மற்றும் போராட்டங்களைத் தூண்டியது, மேலும் ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதத்திற்கு தடை உத்தரவுகளை விதித்தது, மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் NIA குழுவை உதய்பூருக்கு விசாரணைக்கு அனுப்பியது.
போலீஸாரின் கூற்றுப்படி, இரண்டு முக்கிய குற்றவாளிகள் புதன்கிழமை முறைப்படி கைது செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் நான்கு பேர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
கன்ஹையாலால், தனது கடைக்குள் வெட்டிக் கொல்லப்படுவதற்கு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு, மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் மீது கன்ஹையாலால் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மரண அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி போலீஸ் பாதுகாப்பு கோரினார் என புதன்கிழமை, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், "இரு சமூகத்தைச் சேர்ந்த 5-7 பொறுப்புள்ள நபர்கள் அமர்ந்து உடன்பாடு ஏற்பட்ட பிறகு" கன்ஹையாலால் கோரிக்கையை வாபஸ் பெற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.