scorecardresearch

மகாராஷ்டிரா: முதவராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு, என்சிபி துணை முதல்வர், காங்கிரஸ் சபாநாயகர்

சபாநாயகர் பதவி உறுதி செய்யப்பட்டதால், காங்கிரஸ் துணை முதல்வர் பதவிக்கான அழுத்தத்தை குறைத்ததாக தெரிகிறது.  

Maharashtra: Uddhav will take charge today, NCP gets Deputy CM, Congress Speaker
Maharashtra: Uddhav will take charge today, NCP gets Deputy CM, Congress Speaker

Maharashtra: Uddhav will take charge today, NCP gets Deputy CM, Congress Speaker : சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று மாலை மும்பையின் தாதர் பகுதியில் அமைந்திருக்கும் சிவாஜி பூங்காவில் பதவியேற்கிறார். இதற்கான பணிகளை கட்சி உருபினர்களும், அரசு அதிகாரிகளும் முனைப்போடு தயார் செய்து வருகின்றனர்.  முன்னதாக, நேற்று மாலையில்  மூன்று கட்சித் தலைவர்களும் அமைசச்சரவை பங்கீடு குறித்து முழுமையான பேச்சுவார்த்தையையும் நடத்தினர்.

என்.சி.பி தலைவர் பிரபுல் படேல் இதுகுறித்து தெரிவிக்கையில்,”உத்தவ் தாக்கரே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முதல்வராக இருப்பார் என்று ஒருமனதாக முடிவு எடுத்துவிட்டோம்,  சட்டமன்ற சபாநாயகர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கும், துணை சபாநாயகர், துணை முதல்வர் பதவியை தேசியவாத  காங்கிரஸ் கட்சிக்கும் பங்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

முன்னாள் முதல்வரான பிருத்விராஜ் சவானுக்கு சபாநாயகர் பதவி கிடைக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. துணை முதல்வர் பதிவியைப் பொறுத்தவரையில் ஜெயந்த் பாட்டீலுக்கு அதிக வாயப்பிருந்தாலும், அஜித் பவார் பெயரைப் பரிந்துரைக்க கட்சியில் பல மட்டத்தில் இருந்தும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

 வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!


பிரபுல் படேல் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கூறுகையில்“ ஒவ்வொரு கட்சியிலிருந்தும் இரண்டு பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்பார்கள். வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், அமைச்சரவையின் விரிவாக்கம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

சிவசேனா கட்சியிலிருந்து ஏக்நாத் ஷிண்டேவும்/திவாகர் ரோட்டேவும், தேசியவாத கட்சியிலிருந்து சாகன் பூஜ்பால்/திலீப் வால்ஸ் பாட்டீல், காங்கிரஸ்  கட்சியிலிருந்து  அசோக் சவான்/ பாலாசாகேப் தோரத் என மொத்தம் ஆறு அமைச்சர்கள்  இன்றைக்கு பதிவியேற்கலாம் என்று நம்பப்படுகிறது.

சபாநாயகர் பதவி உறுதி செய்யப்பட்டதால், காங்கிரஸ் துணை முதல்வர் பதவிக்கான அழுத்தத்தை குறைத்ததாக தெரிகிறது.

உத்தவ் தாக்கரே, ஷரத் பவார், அகமது படேல் மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட மூன்று கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில்,   அமைச்சரவை இலாகாக்களை எவ்வாறு ஒதுக்கீடு செய்வது, அரசு நிறுவனங்களிலும், மகராஷ்டிரா மேலவையிலும் எதிர்கால நியமனங்கள் குறித்தும்  கலந்துரையாடியதாக தெரிகிறது.

தாக்கரே குடும்பத்திலிருந்து  முதல்முறை மகராஷ்ட்ராவின் உயர்பதிவிக்கு வரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள 80,000க்கு அதிகாமான மக்கள் கலந்துகொள்வர என்று எதிர்பார்க்கப்படுகிறது.  விழா இன்று மாலை 6.40 மணிக்கு தொடங்கும்.

பாஜக அல்லாத மற்ற கட்சிகளின் ஒற்றுமையை வெளிபடுத்தும் விதமாக சிவாஜி பூங்காவின்  பதவி பிரமான விழா நடக்கவிருக்கிறது. சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநில முதல்வர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆதித்யா தாக்கரே நேற்று டெல்லியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் என இருவரையும் சந்தித்து  அழைப்பு விடுத்தார். உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடி,எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரை அழைத்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மதசார்பற்ற ஜனதா தள் தேவ கவுடா, திருணாமுல் காங்கிரஸ்  மம்தா பானர்ஜி , சமாஜ்வாடி  கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்றோரும் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

பதவியேற்பு விழாவிற்கு சிவாஜி பூங்காவில் 40,000 க்கும் மேற்பட்ட நாற்காலிகள் வைக்கப்படும். மாநிலம் மற்றும் நாடு முழுவதும் இருந்து வரும் 800 பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 800 விவசாயிகள் கலந்து கொள்வதற்கான தனி ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன ”என்று தானேவைச் சேர்ந்த சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் சர்நாயக் தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Uddhav thackeray full term chief minister nct deputy cm congress speaker ceremony will start at 6 40 pm