மகாராஷ்டிரா அமைச்சரவையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முஸ்லீம்கள்

Maharashtra ministry uddhav thckeray : மகாராஷ்டிரா அமைச்சரவையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு, 4 முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர்களில் 3 பேர் கேபினட்...

Uddhav led Maharashtra ministry : மகாராஷ்டிரா அமைச்சரவையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு, 4 முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர்களில் 3 பேர் கேபினட் அந்தஸ்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

சிவசேனா ஆட்சியில் நீடிக்க வேண்டுமென்றால் தீவிர இந்துத்துவா கொள்கைகளை பின்பற்ற இயலாது!

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின்போது அமைச்சரவையில் முஸ்லீம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், தற்போது, முஸ்லீம்கள் 4 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் யார்? வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமலின் தீர்க்க தரிசன பதில்… வீடியோ வைரல்

உத்தவ் தாக்ரே முதல்வராக பதவியேற்றிருந்த நிலையில், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவை விரிவாக்கம், டிசம்பர் 30ம் தேதி நடைபெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவாப் மாலிக், ஹசன் முஸ்ரிப், காங்கிரஸ் கட்சியின் அஸ்லாம் ஷேக் கேபினட் அமைச்சர்களாகவும், சிவசேனாவின் அப்துல் சத்தார் அமைச்சராகவும் பதவியேற்றனர். கேபினட் அமைச்சர்களாக அதிக முஸ்லீம்கள் பதவியேற்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்னதாக, 2004ம் ஆண்டில், விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையிலான ஆட்சியில், 7 முஸ்லீம் அமைச்சர்கள் இருந்தபோதிலும், அதில் இருவருக்கு மட்டுமே கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

1960ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் உருவானதில் இருந்து தற்போது வரை மாநிலத்தின் மக்கள்தொகையில் 11.5 சதவீத அளவில் முஸ்லீம்கள் உள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ., அரசில் 9 எம்எல்ஏக்கள் இருந்த நிலையிலும், ஒரு முஸ்லீமுக்கு கூட அமைச்சர் பதவி தரப்படவில்லை.

1960ம் ஆண்டில் இருந்து 2014 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 64 முஸ்லீம்கள் அமைச்சர் பதவி வகித்துள்ளனர். இவர்களில் 31 கேபினட் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

மகாராஷ்டிரா அமைச்சரவையில் 1995ம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு பார்சி இனத்தவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை
1978ம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு கிறித்தவரும் அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லை
அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே ஒரு ஜெயின் மதத்தவர் என்ற பெருமையை சிவசேனா கட்சியின் ராஜேந்திர பாட்டீல் யாத்ராவ்கர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close