சிவசேனா கட்சியின் தேர்தல் சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே திங்கள்கிழமை (அக்.10) டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டுவருகிறது.
தற்போது மகாராஷ்டிராவில் உள்ள அந்தேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வகையில் உத்தவ் தாக்கரே அணியும், ஏக்நாத் ஷிண்டே அணியும் சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை கோரின.
இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், உத்தவ் மற்றும் ஷிண்டே ஆகிய இரண்டு தரப்பும் பயன்படுத்த முடியாத வண்ணம் சிவசேனா சின்னமான வில் அம்பை முடக்கியது.
இதையடுத்து ஷிண்டே மற்றும் தாக்கரே தரப்பு மூன்று விருப்ப சின்னங்கள் அடங்கிய பட்டியலை அளித்தது. உத்தவ் தாக்கரே அளித்த பட்டியலில் திரிசூலம் மற்றும் உதய சூரியன் உள்ளிட்ட சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 14ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தேர்தலில் சிவசேனா கூட்டணி கட்சிகளும் களம் இறங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“