தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம் பற்றி பேசியது சர்ச்சையானது. அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. பா.ஜ.க, இந்துத்துவ அமைப்புகள் இதற்கு கடும் விமர்சனம் செய்தனர். ஏன் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளுக்கும் அதிருப்பி ஏற்பட்டது. இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கு புகார் அளிக்கப்பபட்ட நிலையில் அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், தன் மீதான பல்வேறு எஃப்.ஐ.ஆர்-களை ஒரே வழக்காக இணைத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஏப்ரல் 1) விசாரணைக்கு வந்தது.
அப்போது, "கிரிமினல் வழக்குகளை மாற்றக் கோரி சி.ஆர்.பி.சியின் 406-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கலாம். ஆனால் ரிட் அதிகார வரம்பைக் கையாளும் அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் மனுத் தாக்கல் செய்யப்பட்டது ஏன்" என்று நீதிபதிகள் அமைச்சர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
நீதிபதி தத்தா கூறுகையில், “சில சந்தர்ப்பங்களில், விசாரணை நடத்தப்பட்டு சம்மன்கள் அனுப்பபடும். ரிட் அதிகார வரம்பிற்கு உட்பட்டு உச்சநீதிமன்றத்தால் நீதித்துறை நடவடிக்கைகளை அணுக முடியாது" என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/udhayanidhi-stalin-sanatan-dharma-remark-firs-supreme-court-9244804/
இதைத் தொடர்ந்து, “சட்டச் சிக்கல்களை” கருத்தில் கொண்டு, ரிட் மனுவில் திருத்த செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தமிழக அமைச்சர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, 30 முதல் 40 பேர் மட்டுமே கூடும் கூட்டம் என்பதால் இந்த கருத்தை கூறியதன் பின்னணியில் அரசியல் போர்க்குரல் எழுப்ப முடியாது என்று வாதாடினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“