Advertisment

யுஜிசி வெளியிட்டுள்ள போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் : தமிழகம் தப்பித்தது - மாணவர்களே உஷார்!

UGC : 23 பல்கலைக்கழகங்கள் உரிய அங்கீகாரம் இன்றி இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆறுதல் தரக்கூடிய செய்தி என்னவென்றால், தமிழகத்தில் போலி பல்கலைக்கழகம் எதுவும் செயல்படவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
university grants commission, fake universities, delhi, uttarpradesh, பல்கலைக்கழக மானிய குழு, போலி பல்கலைக்கழகங்கள், டில்லி, உத்தரபிரதேசம்

university grants commission, fake universities, delhi, uttarpradesh, பல்கலைக்கழக மானிய குழு, போலி பல்கலைக்கழகங்கள், டில்லி, உத்தரபிரதேசம்

நாடு முழுவதும் 23 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கிவருவதாக பல்கலைக்கழக மானியக்குழு (UGC) தெரிவித்துள்ளது. இந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லத்தக்கது அல்ல என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.

Advertisment

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானிய குழு( UGC) அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டில் யுஜிசி நடத்திய ஆய்வின்படி, 23 பல்கலைக்கழகங்கள் உரிய அங்கீகாரம் இன்றி இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆறுதல் தரக்கூடிய செய்தி என்னவென்றால், தமிழகத்தில் போலி பல்கலைக்கழகம் எதுவும் செயல்படவில்லை என்பதே ஆகும்.

போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்

டில்லி ( 7 போலி பல்கலைக்கழகங்கள்)

1. கமர்சியல் யூனிவர்சிட்டி லிமிடெட், தர்யாகன்ஞ், டில்லி

2. யுனைடெட் நேசன்ஸ் பல்கலைக்கழகம், டில்லி

3. வொக்கேசனல் பல்கலைக்கழகம், டில்லி

4. ஏடிஆர்- சென்ட்ரிக் ஜூரிடிசியல் பல்கலைக்கழகம், புதுடில்லி

5. இந்தியன் இன்ஸ்ட்டியூசன் ஆப் சயின்ஸ் அண்ட் இஞ்ஜினியரிங், புதுடில்லி

6. விஸ்வகர்மா ஓபன் யூனிவர்சிட்டி ஃபார் செல்ப் எம்ப்ளாயிண்ட்மென்ட், புதுடில்லி

7. ஆத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஸ்பிரிச்சுவல் யூனிவர்சிட்டி), டில்லி

கர்நாடகா

8. படகான்வி சர்கார் வேர்ல்டு ஓபன் யூனிவர்சிட்டி எஜூகேசன் சொசைட்டி, பெல்காம், கர்நாடகா

கேரளா

9. செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம், கேரளா

மகாராஷ்டிரா

10. ராஜா அராபிக் பல்கலைக்கழகம், நாக்பூர்

மேற்குவங்கம்

11. இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் அல்டர்னேடிவ், மெடிசின், கோல்கட்டா

12. இன்ஸ்ட்டியூட் ஆப் அல்டர்னேடிவ் மெடிசின் அண்ட் ரிசர்ச், கோல்கட்டா

உத்தரபிரதேசம்

13. வரனசேயா சமஸ்கிருத வித்வவித்யாலயா, வாரணாசி/ ஜகத்புரி, டில்லி

14. மகிளா கிராம் வித்யாபித் / விஸ்வவித்யாலயா (மகளிர் பல்கலைகழகம்), பிரக்யாராஜ்

15. காந்தி் இந்தி வித்யாபித், பிரக்யாராஜ்

16. எலெக்ட்ரோ காம்பிளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம், கான்பூர்

17. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை பல்கலைகழகம்), அலிகார்

18. உத்தரபிரதேச விஸ்வவித்யாலயா, கோஷி காலன், மதுரா

19. மகாராணா பிரதாப் சிக்ஷா நிகேதன் விஸ்வவித்யாலயா, பிரதாப்கர்

20. இந்திரபிரஸ்தா சிக்ஷா பரிஷத், மகன்பூர், நொய்டா

ஒடிசா

21. நபபாரத் சிக்ஷா பரிஷத், ரூர்கேலா, ஒடிசா

22. நார்த் ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம், ஒடிசா

புதுச்சேரி

23. ஸ்ரீ போதி அகாடமி ஆப் ஹையர் எஜூகேசன், தில்சாபேட்டை, புதுச்சேரி.

Ugc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment