Advertisment

உங்க ஆதாரில் இந்த அப்டேட் அவசியம்: எந்த ஆவணங்களும் தேவையில்லை

Aadhar Card Update News :ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றவே அல்லது சேர்க்கவே எந்த ஆவணமும் தேவையில்லை என UIDAI தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
Jan 27, 2021 09:00 IST
உங்க ஆதாரில் இந்த அப்டேட் அவசியம்: எந்த ஆவணங்களும் தேவையில்லை

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம்  (UIDAI)-ல் வழங்கப்படும் இந்த ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என தினமும் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். இதில் சில திருத்தங்கள் வாடிக்கையாளர்களே ஆன்லைனில் செய்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ள நிலையில், சில திருத்தங்கள் ஆதார் மையத்திற்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

Advertisment

அந்த வகையில் ஆதார் மையத்திற்கு சென்றாலும், அல்லது வீட்டிலேயே ஆன்லைன் முறையில் ஆதார் அட்டை திருத்தம் செய்தாலும் அதற்கு பல்வேறு ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். ஆனால் தற்போது ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ எந்த விதமான ஆவணங்களும் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம்  (UIDAI)- தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

ஆதாரின் நன்மைகள் மற்றும் ஆன்லைன் சேவைகளைப் பெற, உங்கள் மொபைல் எண்ணை UIDAI இல் பதிவு செய்ய வேண்டும் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை சேர்க்கலாம். இது குறித்து இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம்  (UIDAI)- தனது ட்விட்டர் பதிவில்,

உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணைச் சேர்க்க வேண்டுமா? எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் உடனடியாக சேர்க்கலாம். உங்கள் ஆதார் அட்டையுடன் நீங்கள் ஒரு ஆதார் மையத்திற்குள் செல்ல வேண்டும்."ஆதாரில் ஒரு மொபைல் எண்ணைச் சேர்ப்பதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை. மொபைல் எண் கோரிக்கையைச் சேர்க்க / புதுப்பிக்க அருகிலுள்ள எந்த ஆதார் மையத்திற்கும் உங்கள் ஆதாரை எடுத்துச் செல்லுங்கள்." என்று பதிவிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
#Aadhar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment