இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். னி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் வந்த அவரை, குஜராத் முதல்வரும், ஆளுநரும் நேரில் சென்று வரவேற்றனர்.
Advertisment
தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற போரிஸ் ஜான்சன் ,அங்கு உள்ள ராட்டையை சுழற்றி மகிழ்ந்தார்.
#WATCH | Prime Minister of the United Kingdom Boris Johnson visits Sabarmati Ashram, tries his hands on 'charkha' pic.twitter.com/6RTCpyce3k
அவருக்கு காந்தி எழுதிய புத்தகமான 'கைடு டூ லண்டன்' (Guide to London) என்ற புத்தகமும் காந்தியின் சீடர்களில் ஒருவரான மேடலின் சிலேடு எழுதிய 'தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்' (The Spirit's Pilgrmage) என்ற புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த இரண்டு புத்தகங்கள் தான், காந்தி முதன்முதலில் எழுதியவை ஆகும். ஆனால், இந்த 2 புத்தகமும் பொது விற்பனை செய்யப்படவில்லை
அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில் போரிஸ் ஜான்ஸ்சான் எழுதியது, " அசாதாரண மனிதரின் ஆசிரமத்திற்கு வந்தது மிகப்பெரிய பாக்கியம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இங்தியா வந்திருப்பது குறித்து போரிஸ் ஜான்ஸ்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருப்பது அற்புதமானது. நமது பெரிய நாடுகள் ஒன்றாகச் சாதிப்பதற்கான பரந்த சாத்தியக்கூறுகளை காண்கிறேன். நமது அதிகார மையக் கூட்டாண்மை மூலம் வேலைகள், வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. வரும் நாட்களில் இந்த கூட்டாண்மையை வலுப்படுத்த எதிர்நோக்குகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
It’s fantastic to be in India, the world’s largest democracy.
I see vast possibilities for what our great nations can achieve together.
Our powerhouse partnership is delivering jobs, growth and opportunity. I look forward to strengthening this partnership in the coming days. pic.twitter.com/bx0iXHDYov
இந்தியாவுடனான மற்றொரு வர்த்தக ஒப்பந்தம் இந்தாண்டு இறுதிக்குள் நடைபெறும் என போரிஸ் ஜான்சன் நம்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டனில் முதலீடு செய்திருக்கும் முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து பிரிட்டன், இந்தியாவின் வளர்ந்து வரும் வணிகம் குறித்து விவாதிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்து. அந்த வகையில், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அதானியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
டெல்லியில் நாளை இந்திய பிரதமர் மோடியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திக்கிறார். அப்போது, இருநாட்டுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil