Ukrain Russia War Update : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 3-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடியை தொடர்புகொண்ட உக்ரைன் அதிபர் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) தங்கள் நாட்டிற்கு அரசியல் ஆதரவை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பதிவில்,, ரஷ்ய தாக்குதலை முறியடிக்கும் உக்ரைனின் போக்கு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். ரஷ்யாவின் 100,000 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் நாட்டில் உள்ளனர். அவர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர் இதனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா எங்களுக்கு அரசியல் ஆதரவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து டெல்லியில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனில் நடந்து வரும் மோதல் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடியிடம் ஜெலென்ஸ்கி விரிவாக "விளக்கி கூறினார். இதற்காக தற்போதைய மோதலால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்பு குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளது.
வன்முறையை உடனடியாக நிறுத்தவும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு திரும்பவும் மோடி தனது முடிவை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது" என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையுடன் பேசிய மோடி இந்தியர்களை உக்ரைனில் இருந்து விரைவாகவும் பாதுகாப்பாகவும் இந்தியாவிற்கு திரும்ப செய்ய உக்ரேனிய அதிகாரிகளின் உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அழைத்து "வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷ்யாவை கண்டிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது, ஆனால் "இறையாண்மைக்கு மதிப்பளித்து" மாநிலங்களின் பிராந்திய ஒருமைப்பாடு", "ஐ.நா. சாசனம்" "சர்வதேச சட்டம்". கருத்து வேறுபாடுகள் மற்றும் தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தை என்று இந்தியா கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “