Advertisment

உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவிய ரஷ்ய ராணுவம்; இதுவே முதல்முறை

கிழக்கு எல்லை வழியாக, உக்ரைனிலிருந்து வெளியேறிய இந்தியர்கள்; முதன்முறையாக உதவிய ரஷ்ய ராணுவம்

author-image
WebDesk
New Update
உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவிய ரஷ்ய ராணுவம்; இதுவே முதல்முறை

Shubhajit Roy

Advertisment

Ukraine: In a first, Russian army helps evacuate Indians: ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனில் சிக்கித் தவித்த மூன்று இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியதிலிருந்து ரஷ்ய ராணுவம் உதவுவது இதுவே முதல்முறை.

மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், சிம்ஃபெரோபோல் (கிரிமியா) மற்றும் மாஸ்கோ வழியாக ஒரு மாணவர் மற்றும் இரண்டு தொழிலதிபர்கள் அடங்கிய இந்த மூன்று இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவியது.

மாஸ்கோவில் உள்ள தூதரகத்தில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் செவ்வாய்கிழமை கூறினார்: “சிம்ஃபெரோபோலுக்கு அவர்கள் கான்வாய் பேருந்துகள் மூலம் வருவதற்கான வசதியை நாங்கள் செய்தோம், பின்னர் ரயிலில் மாஸ்கோவிற்கு வர உதவினோம், அதன் பிறகு அவர்கள் செவ்வாய்க்கிழமை விமானத்தில் ஏறினர். ஒருவர் சென்னைக்கு செல்லும் மாணவர். இருவர் அஹமதாபாத்திற்குச் செல்லும் தொழிலதிபர்கள்.

உக்ரைன் பகுதியில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற ரஷ்ய ராணுவம் உதவுவது இதுவே முதல் முறை. 22,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் 17,000 க்கும் மேற்பட்டோர் இந்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

இந்த மக்களில், கணிசமான பிரிவினர் வெளியேற முடிந்ததற்கு, உக்ரைன் மற்றும் ரஷ்யா இரண்டும் போர்நிறுத்தத்தின் உறுதிப்பாட்டை கடைப்பிடித்தது உதவியது.

ஆனால் வெளியேற்றப்பட்ட அனைவரும் மேற்கு எல்லைகளில் இருந்து வெளியேறினர். அதாவது போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக் குடியரசு வழியாக வெளியேறினர்.

கிழக்கு எல்லை மற்றும் ரஷ்யா வழியாக இந்தியர்கள் வெளியேறுவது இதுவே முதல் நிகழ்வு.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர், மார்ச் 3 ஆம் தேதி கெர்சன் பிராந்தியத்தின் தலைநகரம் கைப்பற்றப்பட்ட பின்னர், கெர்சனின் முழுப் பகுதியையும் ரஷ்ய துருப்புக்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறினார்.

இதையும் படியுங்கள்: ‘கல்வியும், மதமும் இரு கண்கள் போன்றவை.. இரண்டும் வேண்டும்’ – ஒலிக்கும் ஹிஜாப் குரல்

இதற்கிடையில், ஆப்ரேஷன் கங்கா நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.

உக்ரைன், போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள இந்திய சமூகம் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள், வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததன் அனுபவங்களை விவரித்தனர் மற்றும் பங்களிப்பதில் தங்கள் திருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்த நடவடிக்கையின் வெற்றிக்காக உழைத்த இந்திய சமூகத் தலைவர்கள், தன்னார்வக் குழுக்கள், நிறுவனங்கள், தனியார் நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

வெளியேற்றும் முயற்சிகள் பற்றிப் பேசிய பிரதமர், உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளின் தலைவர்களுடனான தனது தனிப்பட்ட தொடர்புகளை நினைவு கூர்ந்தார் மற்றும் அனைத்து வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் பெற்ற ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment